பள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் 31ம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை - மத்திய அரசின் மூன்றாம் கட்ட தளர்வுகளில் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2020

பள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் 31ம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை - மத்திய அரசின் மூன்றாம் கட்ட தளர்வுகளில் அறிவிப்பு.


கொரோனா பொது ஊரடங்கில் இருந்து நாடு முழுவதும் 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் கொரோனா பொதுமுடக்கத்தின் 3ஆம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வரும் என்றும் கொரோனா பாதிப்பு சூழலை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் முடிவு எடுத்துக்கொள்ளலாம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

பொது ஊரடங்கில் இருந்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தளர்வுகள்:

* நாடு முழுவதும் இரவில் தனிமனித நாடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முற்றிலுமாக திரும்பப் பெறப்பட்டது
* பள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் 31ம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை
* உள்நாட்டில் குறைந்த அளவில் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதி
* சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிப்பு; வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் பணி தொடரும்
* மெட்ரோ ரயில்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்களுக்கு செயல்பட விதித்த தடை நீட்டிப்பு
* திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவைகளுக்கும் தடை நீட்டிப்பு
* பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபானக் கூடங்கள், அரங்குகள் செயல்பட விதித்த தடை தொடர்கிறது.
* மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் தனி நபர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு தடை இல்லை- இ-பாஸ் தேவையில்லை
* வாடிக்கையாளர்களின் சமூக இடைவெளியுடன் வர்த்தக நிறுவனங்கள் இயங்க அனுமதி
* 65 வயதிற்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

6 comments:

  1. நல்லாத்தான் முடிவு எடுக்காங்க பரவாயில்லை நம்ம அரசு ஆனால் தனியார் பள்ளி ஆசிரியரின் நிலை மிக மோசமாக சென்று கொண்டு இருக்கிறது என்பது யாருக்காவது தெரியுமா அல்லது தெரியாதா

    ReplyDelete
  2. Iyya , jolly, jolly, govt give monthly salary .no work, kadavulae innum konjam varushathukku Corona a neeticha Nalla irrukum, summa irukardukku sambalamum koduthu, next incarnation also make us as govt teacher a varanum

    ReplyDelete
  3. Mr GOV ITHU ENNA VANCHA PUGALCHI ANIYA

    ReplyDelete
  4. மாணவர்கள் பள்ளியில் இருந்தால்தான் ஆசிரியர்களுக்கும் வேலை. இங்கு அவர்களை பழித்துக்கொண்டு அவர்களைக் கண்டு வயிறு எரியும் சிலருக்கும் வேலை. இந்த அரசு பணியிடங்களைக் குறைத்துக் கொண்டு தனியார்மயம் என்று சென்றுகொண்டிருக்கிறது. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகளை தனியார் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று வீதிக்கு ஒரு பி.எட் கல்லூரி என்று திறக்கப்பட்டு எப்படி தரமாக நடந்து எவ்வளவு பேரை சொத்துக்களை விற்று பி.எட் படிக்கச்செய்து, பிறகு தகுதித் தேர்வு என்று ஒன்றைக் கொண்டுவந்து அதற்கும் பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல் போல் உருவாகியுள்ள நிலையில் பணம் செலுத்தி படித்து தேர்ச்சி பெற்று தற்போது அந்த சான்றிதழும் காலாவதியாகும் நிலையில் நாம் உள்ளோம். இப்படி எத்தனையோ வகையில் லட்சக்கணக்கான நாம் வேலை வாய்ப்பு பறிபோகியுள்ள நிலையில் அரசுப் பள்ளிகளை நம்பியுள்ள நாம் அதனை கொச்சைப் படுத்தாமல் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். ஆட்சியாளர்கள் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வேலைவாய்ப்பை குறைக்கும் அரசாணை சென்ற ஆண்டில் உருவாக்கப்பட்டு அதனை செயல்படுத்தி பணியிடங்கள் குறைத்துள்ளார்கள். அதனை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும். இந்தக் குமுறல் யாரிடமும் இங்கு வெளிப்பட்டதில்லை. மாறாக ஆசிரியர்கள் வெட்டியாக சம்பளம் வாங்குகிறார்கள் என்றுமட்டும் பொங்குகிறார்கள். தகுதித்தேர்வு என்றவுடன் நீ 2013, 2017 என்று சண்டை போடுகிறார்கள். வேறுவழியின்றி அரசின் தவறான தேர்வுமுறையால் வாரத்தில் 3 அரைநாட்கள் என்று வேலை கொடுக்கப்பட்டு மற்ற நாட்களில் என்ன செய்வது என்று தெரியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள பகுதி நேர ஆசிரியர்கள் மீதும் சண்டை போடுகிறார்கள். முதலில் நமக்கான வழியை அடைத்துக் கொண்டிருக்கிற அரசை நோக்கி நமது வாழ்வாதாரத்திற்கு என்ன வழி என்று கேட்க வேண்டும் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  5. Excuse me idhu mathiya arasu edutha mudivu and education viciyathula andha andha state mudivu edukkalaam nu solliduchu..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி