அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் ! - kalviseithi

Jul 6, 2020

அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் !சென்னையிலும் , சுற்றியுள்ள மாவட்டங்களி லும் , அரசு அலுவலகங்கள் , இன்று முதல் , 50 சத வீத பணியாளர்களுடன் செயல்பட உள்ளன . சென்னை , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , திருவள்ளூர் மாவட்டங்களில் , ஜூன் , 19 வரை , அரசு அலுவலகங்களில் , 50 சதவீத பணியாளர்கள் , சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர் .

கடந்த மாதம் , 19 முதல் , நேற்று வரை , இப்பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் , அரசு அலுவலகங்களில் , 33 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியாற்றினர்

இன்று முதல் , அரசு அலுவலகங்களில் , 19 ம் தேதிக்கு முன்பிருந்த நிலை தொடரும் என , அரசு அறிவித்துள்ளது . எனவே , பழைய முறைப்படி , 50 சதவீத பணியாளர்கள் , இன்று முதல் , சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர் .

முதல் குழுவில் இடம் பெற்றுள்ள ஊழியர் கள் , இன்றும் , நாளையும் பணிபுரிவர் . அடுத்த இரண்டு நாட்கள் , இரண்டாவது குழு ஊழியர்கள் பணிபுரிவர் . அதன் பின் , முதல் குழு ஊழியர்கள் பணிபுரிவர் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி