நோட்டீஸ் வந்தால் நேரில் வரவேண்டாம் வரித்துறை தகவல்! - kalviseithi

Jul 21, 2020

நோட்டீஸ் வந்தால் நேரில் வரவேண்டாம் வரித்துறை தகவல்!


நோட்டீஸ் வந்தால் நேரில் வரவேண்டாம் வரித்துறை தகவல் புதுடெல்லி வருமான வரித் துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால் பெரும்பாலானோர் பதற்றமாகி விடுகின்றனர் .

அப்படி நோட்டீஸ் வந்தால் பதற்றம் அடைய தேவையில்லை . அதேபோல் உடனே அருகில் உள்ள வருமான வரித் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை .

இணைய தளம் மூலம் உங்களுடைய நோட்டீஸுக்கான விளக்கத்தை வழங்கலாம் என வருமான வரித் துறை கூறியுள்ளது . மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தியபடி இணையதளம் மூலமாக வருமான வரிக் கணக்கை மதிப்பீடு செய்யும் நடைமுறை கடந்த அக்டோபரில் அமல்படுத் தப்பட்டது .

இந்த நடைமுறையின் மூலம் வருமான வரிக் கணக்கு தொடர்பாக இதுவரை 58,319 வழக்குகளை விசாரிக்க அதி காரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் . இவற்றில் இதுவரை 7,116 வழக்குகள் இணையதளம் மூலமாகவே தீர்வு காணப் பட்டுள்ளது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி