தனியார் பள்ளிகளிலும் கல்வித்தரம் குறைந்தது - ஆய்வில் தகவல். - kalviseithi

Jul 25, 2020

தனியார் பள்ளிகளிலும் கல்வித்தரம் குறைந்தது - ஆய்வில் தகவல்.


அரசுப்பள்ளிகளைக்காட்டிலும் கல்வித்தரத்தில் தனியார் பள்ளிகள் சிறந்தது என்பதால் , பெற்றோர் தங்கள் குழந்தைகளைதனியார்பள் ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி சேர்க்கிறார்கள். ஆனால் , தனியார்பள்ளிகளி கல்வித்தரம் குறைந்துவிட்டது.

5 - ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2 - ம் வகுப்பில் போடும் வகுத்தல்கணக்குக் கூட தெரியவில்லை என்ற வேதனையானசெய்தியைத் தான் கேட்க முடிகிறது. இந்தியாவில் 12 கோடிக் கும்மேற்பட்டமாணவர்கள் தனியார் பள்ளிகளில்தான் பயில்கிறார்கள் . பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் எண் ணிக்கையில் 50 சதவீதத்திற் கும்மேற்பட்டமாணவர்கள் தனியார் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள் . ஆங்கிலவ ழிக்கல்வியில் தங்கள் குழந் தைகளைபடிக்கவைத்தால் , கல்வித்திறன் அதிகரிப்ப தோடு வேலை வாய்ப்பும் எளிதில் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் பெற் றோர்கள் தங்கள் குழந்தை களை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். ஆனால் சமீபத்தில் வெளியான அறிக் கைகளில் தனியார் பள்ளி கள் , பெற்றோர் எதிர்பார்க்கும் அளவுக்கு கல்வித்தரம் வாய்ந்தவை யாக இல்லை என்பது தெரியவந்துள்ளது.
கிராமப்புற பள்ளிகள் கிராமப்புறங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் 60 சத வீதம் பள்ளிகளில் 5 -ம் வகுப்பு மாணவர்கள் சாதா ரண வகுத்தல் கணக்கைக் கூடபோடமுடியாமல் திணறுகிறார்கள். 35 சதவீத கிராமப்புறதனியார்பள்ளிக ளில் பயிலும் 5 - ம் வகுப்பு மாணவர்கள் , 2 - ம் வகுப்பு கணக்குப் பாடத்தைக்கூட சரியாக புரிந்து கொள்ளமுடியாதவர்களாக இருக்கிறார்கள். இந்தநிலை கிராமப்பு றங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் மட்டும்தான் என்பதில்லை. தனியார் பள் ளிகளில் பயிலும் பணக்கார வீட்டுப்பிள்ளைகள் 20 சதவீ தம் பேர் இப்படித்தான் இருக்கிறார்கள் . 8 முதல் 11 வயது வரைஉள்ள மாணவர் களில் 56 சதவீதம் பேர் 2 - ம் வகுப்பில் சொல்லிக்கொடுக் கப்படும் அடிப்படைபாடத் தைக்கூட புரிந்து கொள்ள முடியாதவர்களாக உள்ளனர். 10 - ம் வகுப்பு மாணவர்கள் பழைய மாணவர்கள் இதே நிலையில்தான் இருக் கிறார்கள் . தனியார் பள்ளிக ளில் 10 - ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் நான்கைந்து பாடங்களில் 50 சதவீதத்திற் கும் குறைவாகத்தான் மதிப் பெண் பெறுகிறார்கள் . தனியார் பள்ளிகளில் 60 சதவீதப் பள்ளிகள் 10 - ம் வகுப்புத் தேர்வுகளைக்கூட முறைப் படி நடத்துவது இல்லை . இதனால் , இந்தப் பள்ளிக ளில்படிக்கும்தங்களது குழந் தைகளின் கல்வி அறிவு எப் படி இருக்கும் என்பதை தீர் மானி க் க முடியாதவர்களாக பெற் றோர்கள் உள்ளனர்.

இதற்கு காரணம் போதுமான கல்வி உபகரணங்கள் இல்லாமை , பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாதது ஆகியவைதான் என்று தேசிய மதிப்பீட்டு கணக்கெடுப்பு அமைப்பு கூறுகிறது. நன்கு பயிற்சிபெற்ற ஆசி ரியர்களால் மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். பெற்றோர்களால் மாணவர்கள் நன்கு கவனிக்கப்படவேண்டும்.

5 comments:

 1. In the thalaippe thavaru. Government school l padikkum children social-Economic status patri arayamal inthamathiriya pesuvathu sampathapattavarhalin ariyamaie.

  ReplyDelete
 2. Kallakurichi district la irukum private schools i vanthu check pannunga. Exactly sankarapuram surrounding schools.very worst manegments....

  ReplyDelete
 3. *Join Kalvinews WhatsApp Group*
  https://chat.whatsapp.com/DUPGouGvokX3Acr1PNJUsi

  *1 – ம் வகுப்பு முதல் , 8 – ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவு !!*
  https://www.kalvinews.net/mid-day-meal-things-distribution/

  *பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்*
  https://www.kalvinews.net/schools-reopening-is-not-possible-now/

  *ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு*
  https://www.kalvinews.net/diploma-in-teacher-education-application-form/

  நேரடியாக உங்கள் WhatsApp குழுக்களில் Kalvinews-ன் செய்திகளைப் பெற *8526858534* என்ற எண்ணை உங்கள் குழுக்களில் இணைக்கவும்.

  ReplyDelete
 4. படிக்கும் குழந்தைகள் எங்கு படித்தாலும் படிக்கும் ....
  படித்தாலும் படிக்காவிட்டாலும் பாஸ் எனில் நான் ஏன் படிக்க வேண்டும் என்ற மனநிலை குழந்தைக்கு வருவது இயல்பு

  ReplyDelete
 5. 1-9 வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி கொடுத்து கல்வியை வளர்ந்த அன்றைய தலைவர்கள் (காமாராசர்) 1-9முதல் இலவச தேர்ச்சி தந்து கல்வி வளர்ச்சியை கெடுக்கும் இன்றைய தலைவர்கள்...
  அவர்கள் தேவைக்கு ஆள் தயார் செய்யும் கூடாரமாக கல்வி சாலைகளை மாற்றிய சாதனை ஆளார்கள்ஃ(அவர்களின் தேவைகள் 1. தினமும் மாலையில் டாஸ்மாக் வருவதற்கு 2.5ஆண்டுக்கு ஒரு முறை சிந்திக்காமல் பிரியாணி மற்றும் மதுவிற்கும் வாக் கு அளிக்க ஒரு ஆள்
  3.தலைவனுக்காக தன் எதிர் காலத்தை மும் சிந்திக்காமல் போராட்டம், பொது சொத்துகளை சேதப்படுத்துதால், பஸ் எரிப்பு, இரயில் மறியல் நடந்த ஆள்
  இவைகள் சரியாக நடைபெறுகிறது..
  எதற்காக கல்வி தரத்தை பற்றி ஏன் அவர்கள் கவலை பட வேண்டும்.. அவர்கள் தர உயரஅனைத்து வழிகளையும் கடந்த 25ஆண்டுகளாக
  செவ்வனே இன்றைய தலைவர்கள்
  செய்து பாரினிலே மிக சிறந்த அறிவாளி
  இனமான தமிழினத்தையும் அதன் வாரிசுகளையும் தலைகுனிய வைத்து விட்டார்கள் இவை களைய கண்டிப்பான ஆசிரியர் வேண்டும்... சுயநலமற்ற தலைவர்கள், சுயநலமற்ற தனியார் பள்ளி தாளாளர்கள், ஒழுக்கத்தை ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் ஓரே இடம் பள்ளிகள் தான், அங்கு போதிக்கும் ஆசிரியர்களுக்கு மீண்டும் மாணவர்களை கண்டிக்கும் பணி மை தர வேண்டும்... அப்போது தான் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி தரம் உயரும் இன்னம் பல...இவை சில தான்...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி