அரசாணையை விமர்சிப்பதா? பள்ளிக்கல்வி இயக்குநர் மெமோ... - kalviseithi

Jul 5, 2020

அரசாணையை விமர்சிப்பதா? பள்ளிக்கல்வி இயக்குநர் மெமோ...


அரசாணையை விமர்சித்ததாக , ஆசிரியர்கள் சங்கத்தினர் இருவருக்கு , ' மெமோ ' கொடுக்கப்பட்டு உள்ளது .

' பள்ளி கல்வி துறையின் செயல்பாடுகளை விமர்சித்து , பேட்டி அளிக்கக்கூடாது ' என , இரண்டு வாரங்களுக்கு முன் , ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு இருந்தார் .

பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த மாவட்டம் , ஈரோடு என்பதால் , இந்த தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.அதைத் தொடர்ந்து , தமிழகம் முழுதும் ஆசிரியர்களும் , சங்க நிர்வாகிகளும் பேட்டி அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் , 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து தொடர்பாகவும் , ' கிரேடு ' முறையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து , தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் பேட்ரிக் ரைமண்ட் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு , பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் , ' மெமோ ' அனுப்பியுள்ளார் .

அரசின் உத்தரவை மீறியும் , அரசு பணியாளர் நடத்தை விதிகளை மீறியும் செயல்பட்டதாக கூறி , 15 நாட்களுக்கு விளக்கம் அளிக்க , பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.இந்த நடவடிக்கைக்கு , இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன .

7 comments:

 1. சரியான நடவடிக்கை

  ReplyDelete
  Replies
  1. அர‌சின் குறைக‌ளை சுட்டிக் காட்டும் உரிமைக‌ள் கூட‌ ஆசிரிய‌ர்க‌ளுக்கு இல்லையெனில் வ‌ருங்கால‌ த‌லைமுறையை எண்ணி அச்ச‌மாக‌ உள்ள‌து...
   ச‌ர்வாதிகார‌ அணுகுமுறை ஒழிக‌...
   ச‌ன‌நாய‌க‌ம் ஓங்குக‌..

   Delete
 2. ஒரு இந்திய குடிமகனின் சமூக உரிமை (சம உரிமை), பேச்சுரிமை (பேச்சு சுதந்திரம்), வெளிபடுத்தும் உரிமை (எழுத்துரிமை), கூடிவாழும் உரிமை மற்றும் அமைதி வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதிக் கோரும் உரிமை போன்ற உரிமைகள் இன்றியமையாத உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன.

  இந்த உரிமைகள் மறுக்கப்படுவதோ அல்லது மீறப்படுவதோ குற்றமுறு செயல்களாக இந்திய தண்டணைச் சட்டக் (இ.த.ச) கூற்றில் வரையறுக்கப்பட்டுள்ளது

  ReplyDelete
 3. அர‌சின் குறைக‌ளை சுட்டிக் காட்டும் உரிமைக‌ள் கூட‌ ஆசிரிய‌ர்க‌ளுக்கு இல்லையெனில் வ‌ருங்கால‌ த‌லைமுறையை எண்ணி அச்ச‌மாக‌ உள்ள‌து...
  ச‌ர்வாதிகார‌ அணுகுமுறை ஒழிக‌...
  ச‌ன‌நாய‌க‌ம் ஓங்குக‌..

  ReplyDelete
 4. Part time teacher evalvu kastam earpatalum govt rules follow pandrom..

  ReplyDelete
 5. வாய்ப்பூட்டுச்சட்டம் போடுகிது அரசு அதையும் சரியான நடவடிக்கை Super என்று கூறும்
  மூடர்களூம் உள்ளனர்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி