Tnpsc Study Materials! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2020

Tnpsc Study Materials!



pdf வடிவிலான மெட்டீரியல் பதிவிறக்கம் செய்திட
Touch Here
மௌன்பேட்டன் திட்டம் அல்லது ஜூன் 3 திட்டம் ( 1947 )

இந்தியப் பிரிவினை தவிர்க்க இயலாதது என உணர்ந்து பிரிவினை திட்டத்தை மௌன்பேட்டன் வெளியிட்டார் .
தயாரித்தவர் - V.P. மேனன் .

* ஆலோசணைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் - நேரு , படேல் , கிருபளானி , லியாகத் அலிகான் , அப்துல் ராவ் , பல்தேவ்சிங் இந்திய விடுதலை மசோதா ஜுலை 4 ல் இங்கிலாந்தின் பொது அவையில் தாக்கல் செய்யப்பட்டது ஜூலை 18 ல் நிறைவேற்றப்பட்டு இந்திய விடுதலைச் சட்டம் , 1947 நிறைவேற்றப்பட்டது . இந்த சட்டத்தின் படி இந்தியா ஆகஸ்டு 14 அன்று பிரிக்கப்பட்டது- பாகிஸ்தான் தனி நாடாக உருவாக்கப்பட்டது . பாகிஸ்தானின் முதல் கவர்னல் ஜெனரல் - ஜின்னா பிரதமா- லியாகத் அலிகான்

• ஆகஸ்டு 15 நள்ளிரவில் இந்தியாவிற்கு விடுதலை முதல் கவர்னர் ஜெனரல்- மௌன்பேட்டன் . பிரதமர்- நேரு

* பாராளுமன்றத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றியவர் - மௌன்பேட்டன்

* பெண்கள் சார்பாக கொடி எடுத்து கொடுத்தவர்- ஹன்சா மேத்தா வந்தே மாதரம் பாடியவர் சசீதா கிருபளானி

* இந்த நள்ளிரவு நேரத்தில் உலகமே உறங்கிக் கொண்டிருக்கையில் இந்தியா சுதந்திரமாக வாழ விழித்துக் கொள்கிறது - நேரு

இந்தியப் பிரிவினையை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளுமானால் அது எனது சவத்தின் மீது தான் நிகழும் - காந்தி

* பூமி பிளவுபடலாம் , வானம் வீழ்ந்து விடலாம் , ஆனால் இந்தியா ஒருபோதும் பிரிவபடாது - படேல் சுதேச அரசுகள் ஒருங்கிணைப்பு

* இந்திய சுதேச அரசுகளை இந்தியாவுடன் இணைக்க இந்திய அரசுகள் துறை உருவாக்கப்பட்டது - அமைச்சர் படேல்

* இந்தியாவில் மொத்தம் 565 சுதேச அரசுகள் இருந்தன . -பிரிட்டிஷ் மாகாணங்கள் 9

* அதில் 562 அரசுகள் ஆகஸ்டு 15 ல் இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது

* காஷ்மீர்- மன்னர் இந்து ராஜா ஹரிசிங்.- 1947 அக்டோபர் 26 ல் இணைந்தது

* ஐதராபாத் - இந்திய சுதேச அரசுகளில் பெரியது- 1948 ல் இணைக்கப்பட்டது

* ஜூனகாத் - படையெடுப்பு நடத்தி பின் மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தி இந்தியாவுடன் 1949 ல் இணைந்தது

* 1954- பிரெஞ்ச் பகுதிகள் இணைக்கப்பட்டன - 1961- கடைசியாக போர்ச்சுகீசியப் பகுதிகள் இணைக்கப்பட்டன

* 1947 நவகாளி யாத்திரை கல்கத்தா நகரில் காந்தி நடத்தினார்.- இந்து முஸ்லிம் கலவரத்தைக் கண்டித்து.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி