பள்ளிகளைத் திறப்பதில் மத்திய அரசு அவசரம் காட்டக் கூடாது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2020

பள்ளிகளைத் திறப்பதில் மத்திய அரசு அவசரம் காட்டக் கூடாது!


பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதமே பள்ளிகள் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. கொரோனா அச்சம் தணிந்து எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பதும் தெரியவில்லை. மராட்டியம், தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்த நிலையில், இன்றைக்குள் அதுகுறித்த விவரங்களை தெரிவிக்கும்படி மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. பள்ளிகளை ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மாதத்தில் திறக்கலாம் என்றும், இதுபற்றி பெற்றோரின் விருப்பங்களை அறிந்து முடிவெடுக்கும் படியும் மத்திய அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது? விரைந்து முடிவெடுக்கும்படி மாநில அரசுகளை கட்டாயப்படுத்துகிறது? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்புகள் இன்னும் குறையவில்லை; மாறாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. மத்திய அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு, பள்ளிகள் திறக்கும் தேதியை மாநில அரசுகள் முடிவு செய்தால் கூட, அந்த தேதிகளில் பள்ளிகளை திறக்க முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பள்ளிகளைத் திறக்கும் விஷயத்தில் கூட மத்திய அரசு தலையிட்டு, அனைத்து அதிகாரங்களையும் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது மாநில உரிமைகளை பறிக்கும் செயலாக அமையும். மாறாக, பள்ளிகளை எப்போது திறக்கலாம்? வகுப்புகளை எந்த முறையில் நடத்தலாம்? என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? என்பன குறித்து உள்ளூர் சூழலை கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்.

14 comments:

  1. *கொரோனாவே வா!*
    *என்னை கொன்று விட்டுப் போ!!*

    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் வாழ்வாதரத்தை இழந்த தேர்வரின் வலிநிறைந்த வரிகள்....
    முழு விடியோவை காண
    https://youtu.be/avsLYcQNLJw

    ReplyDelete
    Replies
    1. Po da kolaiya...kolathanam idhuku nee devaiyailla po..vala evalvo way irruku...

      Delete
  2. Intha corona previte school teachers i konja konjama kolluthu...

    ReplyDelete
    Replies
    1. Private ku kuda spelling theriyula neeyalam oru pvt teacher a lusu...

      Delete
    2. Avanga entha speed la type pannangalo. Nee Arivali thaan pa.....

      Delete
  3. தமிழக அரசுக்கு தகுதியான பாடல் இது

    தகுதித் தேர்வுல

    தமிழ் பாடத்தில

    நூற்றுமூன்று மதிப்பெண் எடுத்தேன்

    தமிழகஅரசே
    தமிழ்மொழிய -இப்ப

    தலைகுனிய வைக்குற

    ஏழு ஆண்டு முடியப்போகுதே

    நான்படிச்ச தமிழுக்கு வேலை கொடு

    பெண்கல்வி வீணாபோகுதே மகாகவி
    பாரதி பாடிய பாட்டும் வேடிக்கையாய் ஆகுதே

    ReplyDelete
    Replies
    1. தேர்வு

      https://youtu.be/7PoZQAZOWxo

      Delete
  4. Already 13 batch ku 15000 posting pottache

    ReplyDelete
  5. Super song..👍👍👍👌👌👌👌👌

    ReplyDelete
  6. Ethil oru arivali velai kitaigamal spelling correction pannittu IAS officer orutherai kalviseithil posting pottu ulangal muthalvar alosakara potungal sir nium dog nanum dog ethil enavetrumai

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி