பள்ளிகள் திறக்கப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2020

பள்ளிகள் திறக்கப்படுமா?

தமிழகத்தில் முழுமையாக கொரோனா பாதிப்பு முடியும் வரை, பள்ளிகளை திறக்க வாய்ப்பே இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. இதன் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வும் கடந்த 2 மாதம் முன் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் இரண்டு நாட்கள் முன் கல்லூரி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் செமஸ்டர் தேர்வு இன்றி அடுத்த ஆண்டுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. பொறியியல் படிப்பிற்கு மூன்றாம் ஆண்டு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்படுமா?

எண்ணம் எங்களுக்கு இல்லை
தமிழகத்தில் இப்போது பள்ளிகளை திறக்கும் எண்ணம் இல்லை. அடுத்த மாதம் அல்லது செப்டம்பர் மாதம் பள்ளி திறப்பது குறித்து எங்களுக்கு அறிவுரைகளை வழங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு எங்களுக்கு கடிதம் எழுதி உள்ளது. இதை ஆலோசனை செய்து வருகிறோம்.

சூழ்நிலையை பொறுத்தே
பள்ளிகளை திறக்கும் திட்டம் எதுவும் இல்லை. மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை பொறுத்தே முடிவு எடுக்கப்படும். கொரோனா பாதிப்பு இருக்கும் வரை பள்ளிகளை திறக்க முடியாது. கொரோனா சரியான பின்புதான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். சரியான நேரத்தில் முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும், என்று கூறியுள்ளார்.


16 comments:

  1. Super...but pvt teachar life over...

    ReplyDelete
    Replies
    1. https://karumpalagaiseithi.blogspot.com/2020/07/blog-post_24.html




      2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்

      Delete
  2. தமிழகத்தில் முழுமையாக பாதிப்பு குறைய 5 ஆண்டுகள் ஆனாலும் பள்ளிகளை திறக்க மாட்டிங்களா சார். ஆகஸ்டில் திறக்க நடவடிக்கை பண்ணுங்க.

    ReplyDelete

  3. தமிழகத்தில் முழுமையாக பாதிப்பு குறைய 5 ஆண்டுகள் ஆனாலும் பள்ளிகளை திறக்க மாட்டிங்களா சார். ஆகஸ்டில் திறக்க நடவடிக்கை பண்ணுங்க.Reply

    ReplyDelete

  4. தமிழகத்தில் முழுமையாக பாதிப்பு குறைய 5 ஆண்டுகள் ஆனாலும் பள்ளிகளை திறக்க மாட்டிங்களா சார். ஆகஸ்டில் திறக்க நடவடிக்கை பண்ணுங்க.Reply

    ReplyDelete
  5. Kiruku payanalamnammma vote pottu select panunam la nammala than ethulayavathu adekanum

    ReplyDelete
  6. https://karumpalagaiseithi.blogspot.com/2020/07/blog-post_24.html




    2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்

    ReplyDelete
  7. இரண்டுவகுப்பு(+2,10),,,,,ஆகஸ்ட் open pannalam

    ReplyDelete
  8. Higher secondary students ku class start panna seekkirama mudivu edungaya...

    ReplyDelete
  9. Anaivarum cooli velaiku selvathu thaan govt noookam...yarum pdikavendam entru ennum one month la solvanga..

    ReplyDelete
  10. Plus two open பண்ணலாமே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி