பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு நடத்துவதற்கு நாடு முழுவதும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2020

பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு நடத்துவதற்கு நாடு முழுவதும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு !


பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு நடத்துவதற்கு நாடு முழுவதும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் ஆன்லைனில் மனு அனுப்பி உள்ளனர்.

பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் இம்மாதம் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா தாக்கம் காரணமாக, இந்த தேர்வு ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், செப்டம்பர் மாத இறுதிக்குள் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்நிலையில், இறுதி ஆண்டு தேர்வை ரத்து செய்யாததற்கு நாடு முழுவதும் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் மனுக்கள் தாக்கல் செய்வதுடன் ‘டுவிட்டர்‘ பக்கத்தில், ‘ஸ்டூடண்ட்ஸ் லைவ்ஸ் மேட்டர்‘ என்ற ஹேஷ்டேக் மூலம் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

46 ஆயிரம் மாணவர்கள் கையெழுத்திட்ட ஒரு ஆன்லைன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இறுதி ஆண்டு மாணவர்களாகிய நாங்கள், அரசின் பரிசோதனை கருவிகள் அல்ல. நாங்கள் தேர்வை பார்த்து பயப்படவில்லை. கொரோனா, சமூக பரவலாகி விடுமோ என்றுதான் அஞ்சுகிறோம். தேர்வு அறையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து விடலாம். ஆனால், பல்கலைக்கழக விடுதிகளில் நாங்கள் பொதுவான குளியலறை, கழிப்பறை மற்றும் உணவுக்கூடத்தை பயன்படுத்தும்போது எப்படி சமூக இடைவெளியை பின்பற்றுவது? இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதுபோல், 75 ஆயிரம் மாணவர்கள் மற்றொரு ஆன்லைன் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரி ஆசிரியர் மித்துராஜ் துசியா என்பவரும் தேர்வு நடத்துவதை டுவிட்டரில் விமர்சித்துள்ளார். முந்தைய தேர்வுகள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கலாம் என்று சிலர் யோசனை தெரிவித்துள்ளனர்.

3 comments:

  1. ஐயா சேலத்து தெய்வமே pls exam postponed செய் தெய்வமே கெரேனவுக்கு எங்களை பலி கொடுக்காதீங்க எதிர்காலம் உங்கள் கையில் வாழ்வா? சாவா?

    ReplyDelete
  2. பள்ளி, கல்லூரிகள் மருந்து கண்டுபிடித்து சரி செய்யப்படும் வரை திறக்கப்படாமல் இருந்தால் மகிழ்ச்சியே. மாணவர்களின் ஆரோக்யம், எதிர்காலம், அடுத்த தலைமுறை என அனைத்தும் மிக முக்கியமே.

    ReplyDelete
  3. University exam cancel pannum safety is must important

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி