பள்ளிக் கல்வி - Fit India Movement - விடுபட்ட பள்ளிகள் 25.07.2020க்குள் இணையதளத்தில் பதிவு செய்து தற்போதைய நடவடிக்கைகளை உள்ளீடு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள். - kalviseithi

Jul 21, 2020

பள்ளிக் கல்வி - Fit India Movement - விடுபட்ட பள்ளிகள் 25.07.2020க்குள் இணையதளத்தில் பதிவு செய்து தற்போதைய நடவடிக்கைகளை உள்ளீடு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்.


மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் Fit India Movement சார்பாக www.fitindia.gov.in எனும் இணையதளம் உருவாக்கப்பட்டு , மேற்கண்ட இணையதள முகவரியில் இப்பொருள் சார்பாக அனைத்து பள்ளிகளும் Fit India School Certificate , Fit India Flag , Schools with either 3 Star or 5 Star Rating போன்ற விவரங்களை உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து , உள்ளீடு செய்வதற்குண்டான விவரங்களின் வழிமுறைகளும் அதன் பொருட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு 24.01.2020 நாளிட்ட கடிதத்தில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் , நாளது வரை குறைந்த அளவிலான பள்ளிகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருப்பது ஏற்புடையது அல்ல.எனவே இதுவரை மேற்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் , உடன் பதிவேற்றம் செய்திடும் பொருட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இப்பணி குறித்து அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் 25.07.2020 - க்குள் பதிவு செய்துள்ளதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் , இது சார்ந்து , அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தமைக்கு உடன் ஒப்புதல் கடிதம் அளிக்குமாறும் , அனைத்துப் பள்ளிகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததை உறுதி செய்து அதன் அறிக்கையினை 25.07.2020 அன்று மாலை 3 மணிக்குள் இவ்வியக்கக மின்னஞ்சல் முகவரிக்கு ( jdnsed@nic.in ) அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

DSE - Fit India Movement Dir Proceedings - Download here...


3 comments:

 1. *கொரோனாவே வா!*
  *என்னை கொன்று விட்டுப் போ!!*

  ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் வாழ்வாதரத்தை இழந்த தேர்வரின் வலிநிறைந்த வரிகள்....
  முழு விடியோவை காண
  https://youtu.be/avsLYcQNLJw

  ReplyDelete
 2. Obtain the Indian Visa Online for business or touristic purposes. All foreign nationals are required to submit the e-Visa India Visa before travelling to India india visa application

  ReplyDelete
 3. Thanks‌ ‌for‌ ‌sharing‌ ‌such‌ ‌a‌ ‌nice‌ ‌post.‌ ‌I'll‌ ‌try‌ ‌to‌ ‌read‌ ‌your‌ ‌all‌ ‌shared‌ ‌posts.‌ ‌I‌ ‌also‌ ‌bookmarked‌ ‌your‌ ‌website‌ ‌to‌ ‌stay‌ ‌up‌ ‌to‌ ‌date‌ ‌with‌ ‌your‌ ‌new‌ ‌published‌ ‌articles.‌
  turkish airline viosa online because Turkey has reopened its international air, land, and sea space. Most of the scheduled international flights have reopened operations as well. Here are all the details about a indian visa electronic.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி