Flash News : NEET, JEE தேர்வுகளுக்கு புதிய தேர்வு தேதிகள் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2020

Flash News : NEET, JEE தேர்வுகளுக்கு புதிய தேர்வு தேதிகள் அறிவிப்பு.


செப். 13ல் நீட் தேர்வு: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு:

மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து இன்றைக்குள் (ஜூலை 3) பரிந்துரைகளை வழங்க தேசிய தேர்வு முகமை உள்ளிட்ட அமைப்புகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியிருந்தது.

அதனடிப்படையில், நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி