TNPSC தேர்விற்கு தயாராவோம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2020

TNPSC தேர்விற்கு தயாராவோம்!


ஒத்துழையாமை இயக்கம்

அன்னிபெசன்ட் 1921 முதல் 1923 ) ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் அம்மையார் ஒத்துழையாமை இயக்கமும் தீவிரமாக நடைபெற்றது . அந்நியரின் விதிமுறைக்களுக்கு எதிரான போராட்டங்கள் 1921 மார்ச்சில் தொடங்கின . மாகாணத்தின் பல பகுதிகளிலும் மது அருந்ததுவதற்கு எதிரான இயக்கங்கள் 1921-22 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றன .

குறிப்பாக மது அருந்துவதற்கு எதிரான போராட்டம் மதுரையில் தீவிரமாக நடைபெற்றது . பொதுவாகவே , தமிழ்நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் பரவலாக நடைபெற்றது . இதன் முக்கிய தலைவர்களாக
சி . ராஜகோபாலாச்சாரி , எஸ்.சத்தியமூர்த்தி , ஈ . வெ . ராமசாமி நாயக்கர் போன்றோர் செயல்பட்டனர் .

அந்த சமயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . காந்தியின் செயல்திட்டங்களில் சட்டசபை புறக்கணிப்பே முக்கியமானது என்று சி . ராஜகோபாலாச்சாரி வலியுறுத்தினார் . ஆனால் , கஸ்தூரிரங்க அய்யங்கார் , சீனுவாச அய்யங்கார் , வரதராஜூலு நாயுடு , விஜயராகவாச்சாரி போன்ற தலைவர்கள் இதனை ஏற்கவில்லை .

இதற்கிடையில் பெரியார் ஈ.வெ.ரா.கேரளத்தில் கு.காமராஜ் வழக்கத்திலிருந்த சமூகப் பாகுபாட்டைக் கண்டித்து வைக்கம் சத்யாக்கிரகப் போராட்டத்தை தொடங்கினார் .

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வி.வி.எஸ் . அய்யர் நடத்தி வந்த சேரன் மாதேவி குருகுலத்தில் சமூகப்பாகுபாடு நிலவுவதைக் கண்டித்த பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினார் . புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.சத்தியமூர்த்தியும் விடுதலைப்போராட்ட வீரர்களில் முக்கியமானவர் .

1929 ல் சைமன் குழு தமிழ்நாட்டுக்கு வந்தபோது , சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்திற்கு சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார் . விருதுநகரைச் சேர்ந்த கு . காமராஜ் மற்றொரு விடுதலை வீரர் ஆவார் .

1924 ல் வைக்கம் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதின் மூலம் அவர் தேசிய இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார் . 1929 ல் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும் , பொருளாளராகவும் அவர் விளங்கினார்.

ஆரம்பத்திலிருந்தே காமராஜர் மக்கள் தலைவராகத் திகழ்ந்தார் . எளிமையான நடையில் அவர் பேசுவார்.நுண்ணறிவும் செயல்திறனும் மிக்கவராக அவர் திகழ்ந்தார் . தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று மக்களின் பல்வேறு பிரச்சினைகளை அவர் புரிந்து கொண்டார் .

தமிழ்நாட்டிலிருந்த சாமானியர்களில் ஒருவராக அவர் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார் . தமிழ்நாட்டின் கிராமங்களுக்கு காங்கிரஸ் இயக்கத்தை கொண்டு சென்றவர் காமராஜ் என்று கூறலாம் .

🏵️🥀MODEL QUESTION & CA - TNPSC STUDY MATERIAL!

🥀Touch Here

🏵️🥀UNIT 9 - போட்டித் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குறிப்புகள் அனைத்தும்...

🥀Touch Here


1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி