TNPSC தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2020

TNPSC தேர்வுகள் எப்போது நடத்தப்படும்?


கொரோனா முடிந்து, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டால் தான் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்ற அரசுப் பணியாளர் தேர்வாணையம் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

ஆண்டுதோறும் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் ஜனவரி மாதம் துவங்கி அந்த ஆண்டின் இறுதிக்குள் குரூப் 1, குரூப்4, குரூப் 2 உள்ளிட்ட பல போட்டி தேர்வுகளை நடத்துவது வழக்கம். இதற்கான அட்டவணை ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படும்.

இந்த ஆண்டு கொரோனா காரணமாக அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில் கொரோனா தாக்கம் குறைந்து பள்ளி, கல்லூரிகள் திறந்தபிறகே தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என அரசு பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேர்வுக்கு முன்னதாக புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. ஆண்டுதோறும் அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில்  10ஆயிரம் பேர் அரசுப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகின்றனர். தற்போதைய நிலையில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஆயிரக்கணக்கானவர்கள் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

12 comments:


  1. இதையாவது சரியா செய்வீர்களா?
    செங்கோட்யைரிடம் பத்திரிக்கையளர் கேள்வி!

    https://karumpalagaiseithi.blogspot.com/2020/07/blog-post_25.html

    ReplyDelete
  2. தமிழ்நாடு அரசு இந்த ஆண்டுக்கான தேர்வுகளை படிப்படியாக ரத்து செய்துவிட்டு முன்பு எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியை வெளியிட்டு வருகிறது.அதே போல் சென்ற வருடம் TNPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் குரூப்-1 குரூப்-2 குரூப்-4 உள்ளவர்களைக் கொண்டு இந்த ஆண்டிற்கான TNPSC காலியிடங்களை நிரப்பலாம்

    ReplyDelete
  3. பொதுவ , பரிட்சை வையுங்க , அதுல காட்டலாம் நம்ம வேகத்த .

    ReplyDelete
  4. Seniority adipadila velai kodugalam..

    ReplyDelete
  5. Based on rank list in previous exams.

    ReplyDelete
  6. New TNPSC maths channel for those who are preparing for the TNPSC exams

    SUBSCRIBE and share it with your Friends

    https://youtu.be/zyA31o80p0w

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி