Whatsapp Group மூலமாக தமிழக அரசு குறித்து அவதூறு பரப்பிய ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2020

Whatsapp Group மூலமாக தமிழக அரசு குறித்து அவதூறு பரப்பிய ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!


தமிழக அரசு குறித்து வாட்ஸ் அப்பில் அவ தூறு பரப்பியது தொடர்பாக , சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள் ளிகள் திறப்பு தாமதமாகி வருகிறது. இதனால் , தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. அதேசமயம் , அரசுப்பள்ளி ஆசிரியர்களை பொறுத்தவரை , கல்வி சார்ந்த நடவடிக்கைகளி லும் , பாடம் சார்ந்த பயிற்சிகளி லும் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே , சேலம் மாவட்டத்தில் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் வாட்ஸ் அப் குரூப்களில் , தமிழக அரசு குறித்த அவதூறு பரப்பிய விவ காரம் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில் , " சேலம் மாவட்ட ஆசிரியர்கள் பல்வேறுவிதமான வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி , அதன் மூலம் கல்வி சார்ந்த மற்றும் பிற பயனுள்ள தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஓரிரு ஒன்றியங்களைச் சேர்ந்த தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் , மீம்ஸ் தொடர்பான ஒரு குழுவை பயன்படுத்தி வருவ தாக கூறப்படுகிறது. சமீப கால மாக அந்த குழுவில் , தமிழக அரசு பற்றியும் , முதல்வரை பற் றியும் கேலிக்குள்ளான வகையில் , அவதூறு பரப்பப்பட்டுவந்துள்ளது. இதுகுறித்து அதே குழுவில் உள்ள ஆசிரியர்கள் சிலர் , ஆளும்கட்சியின் முக்கிய பிரமுகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரின் உத்தரவின் பேரில் , கல்வித்துறை அதிகா ரிகள் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் , சில விவகாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் , சம் பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாயும் என எதிர் பார்க்கப்படுகிறது , ” என்றனர். இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது , " அவதூறு தொடர்பாக வந்த புகாரின் பேரில் , விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் முடிவில் நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் , ” என்றனர் . தமிழக அரசை அவதூறு செய்ததற்காக , ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப் பட்டுவருவது , பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 comments:

  1. எந்த‌ மாதிரியான‌ செய்தி என்பதையும் சேர்த்து வெளியிடுங்க‌ள் க‌ல்விச் செய்தி...அப்போது தான் அது அவ‌தூறா ?இல்லையா? என‌ நாங்கள் முடிவு செய்ய‌ முடியும்..
    அதைவிடுத்து அவ‌தூறு என‌ நீங்க‌ள் முடிவு செய்வ‌து எந்த‌ வ‌கையில் நியாய‌ம்..

    ReplyDelete
  2. ஆசிரியர் தகுதித் தேர்வின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்க கோரி
    2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தின் சார்பில் முதல்வர் தனிப்பிரிவிற்கு தொடர்ந்து மனு செய்யப்பட்டு வருகிறது.

    https://karumpalagaiseithi.blogspot.com/2020/07/blog-post_18.html

    ReplyDelete
  3. இந்த ஆட்சி இரண்டுமுறை இருந்து ஆசிரியர் வேலைக்கு தயாரானவர்களுக்கு பல்வேறு குளறுபடிகளைச் செய்ததுதான் மிச்சம். பல்வேறு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை தெருவிற்கு ஒன்றாக திறந்துவிட்டு அனைவரையும் பணம் செலவு செய்து படிக்கச் செய்து, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் வேலை என்று கூறி, சமீபத்தில் தேர்ச்சி பெற்றவர்களுடன் பத்தாண்டுகளுக்கு முன்பு படித்தவர்களை அவர்களின் மதிப்பெண்களையெல்லாம் கணக்கிடும்போது அனுபவசாலியாக உள்ளவர்களை, கொஞ்சம் வயது அதிகமானவர்களை, தகுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாலும் வெயிட்டேஜ் என்ற ஒன்றை கணக்கிட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த பெருமை இந்த ஆட்சியாளர்களையே சேரும். இதே போன்று எம்ப்ளாய்மெண்டில் இருந்து வயது மூப்பு அடிப்படையில் சமையலர், அலுவலக உதவியாளர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டுக் கொண்டு வந்தது. அவற்றை நீதிமன்றம் மூலமாக வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டு அதில் தகுதியானவர்கள் யாரோ அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நீதியை அநீதியாகப் பெற்று அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் இடங்களில் ஏழைகளுக்கு வரும் வாய்ப்புகள் தடுக்கப்பட்டு இப்படி பல அநீதிகள் நடந்த வண்ணம் உள்ளது. ஒருபுறம் அனைத்துப் பணியிடங்களும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அப்படி வேலை வழங்கப்பட்டாலும் வெறும் 7000 என்ற குறைந்த கால்வயிறு கஞ்சிக்குக் கூட பத்தாத ஒரு சம்பளத்தை பல்வேறு துறைகளில் நிரப்பி படித்தவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி ஆட்சியின் கடைசி நேரத்திற்கு வந்துவிட்டார்கள். இப்போதாவது யார்வயிற்றிலும் அடிக்காமல் வேலைவாய்ப்பைக் கொடுத்து ஏங்கி நிற்கும் ஏழைகளுக்கு வாழ்வளிப்பார்களா? இதை இங்கு கமெண்ட் மூலம் சண்டை போட்டுக்கொள்பவர்கள் உணர்வார்களா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி