10ம் வகுப்பு மார்க் மதிப்பெண்கள்: இந்த வாரம் வெளியிட முடிவு - kalviseithi

Aug 4, 2020

10ம் வகுப்பு மார்க் மதிப்பெண்கள்: இந்த வாரம் வெளியிட முடிவுபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விபரத்தை, இந்த வார இறுதிக்குள் வெளியிட, தமிழக பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில், 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பித்த, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், சராசரி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன.

இதற்காக, மாநிலம் முழுதும் மாணவர்களின் மதிப்பெண்கள், பள்ளி வாரியாக சேகரிக்கப்பட்டு, பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை, முதல்வரின் ஒப்புதலுக்கு, அரசு தேர்வுத் துறை சமர்ப்பித்துள்ளது. முதல்வரின் ஒப்புதல் கிடைத்ததும், மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்படும் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.மதிப்பெண் பட்டியல் வெளியானதும், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

9 comments:

 1. ஐயா பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்ச்சி குறித்து எந்த ஓரு அறிவிப்பு வரவில்லை தேர்ச்சியா அல்லது மறுதேர்வுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுமா பதில் இருந்தா செய்தி வெளியிடுங்கள்

  ReplyDelete
 2. ஐயா பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்ச்சி குறித்து எந்த ஓரு அறிவிப்பு வரவில்லை தேர்ச்சியா அல்லது மறுதேர்வுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுமா பதில் இருந்தா செய்தி வெளியிடுங்கள்

  ReplyDelete
  Replies
  1. தனித்தேர்வர்களுக்கு தேர்வு உண்டு என்று கல்வித்துறை அமைச்சர் கூறியிருக்கிறார் 2 நாட்களுக்கு முன்பு செய்தி நான் தொலைக்காட்சியைப் பார்த்தேன்

   Delete
 3. Will they give pass mark for everyone.?

  ReplyDelete
 4. Part time teacher valvadharam illama irrukirom engalai kapatrungal...

  ReplyDelete
 5. Replies
  1. Appa padikira paiyanum padikaatha paiyanum vithyaasamaa illaama poirum la you should note this

   Delete
 6. Grade is the correct decision. What to do we have to accept what they are giving. Really these children have bad luck.

  ReplyDelete
 7. முதல் முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் தனித் தேர்வர்களின் தேர்ச்சி குறித்து தெரிவிக்கவில்லை.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி