ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி-களில் பட்டமேற்படிப்பு படிக்க ஆகஸ்ட் 10 முதல் விண்ணப்பிக்க அழைப்பு. - kalviseithi

Aug 8, 2020

ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி-களில் பட்டமேற்படிப்பு படிக்க ஆகஸ்ட் 10 முதல் விண்ணப்பிக்க அழைப்பு.

ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி-களில் பட்டமேற்படிப்பு படிக்க ஆகஸ்ட் 10 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 15ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்ட மேற்படிப்பில் சேர்வதற்கு, ஜேஏஎம் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு 2021 பிப்ரவரி 14ல் நடைபெற உள்ளது.எம்எஸ்சி, ஜாயின்ட் எம்எஸ்சி - பிஎஸ்சி உள்ளிட்ட பட்டமேற்படிப்புகளை படிப்பதற்கு இந்த தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமாகும். 

ஜேஏஎம் தேர்வு இரண்டு கட்டங்களாக நடக்கும். முதல் கட்டத்தில், உயிர் தொழில்நுட்பம், கணித அறிவியல் மற்றும் உயிரியல் படிப்புகளுக்கும், இரண்டாவது கட்டத்தில், வேதியியல், பொருளாதாரம், புவியியல் மற்றும் கணித படிப்புகளுக்கும் நடக்கும். தேர்வின் முடிவு மார்ச் 20 அன்று வெளியாகும். ஆன்லைன் மூலம் மட்டுமே இந்த தேர்வு நடக்கும். இரண்டு தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். தேர்வர்கள் ஒரு தேர்விற்கு ரூ.1500, இரு தேர்வுகளுக்கு ரூ.2,100 கட்டணம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி