கல்லூரியில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்: உயர்கல்வித்துறை - kalviseithi

Aug 8, 2020

கல்லூரியில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்: உயர்கல்வித்துறை

கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும்,  அனைத்து மாணவர்களும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இறுதியாண்டு தவிர்த்து கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களின் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்தநிலையில் அண்மையில் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது அதில் இறுதியாண்டு மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

நடத்தாத தேர்வுக்கு மாணவர்களை கட்டணம் செலுத்த வேண்டும் என்கிற உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் மாணவர்கள் தேர்வுகளுக்கான கட்டணம் செலுத்த வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இறுதியாண்டு தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது, மதிப்பெண் கணக்கிடும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதால் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்று உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

4 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி