கால்நடை மருத்துவ படிப்பு 24 முதல் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2020

கால்நடை மருத்துவ படிப்பு 24 முதல் விண்ணப்பம்

'கால்நடை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, வரும், 24ம் தேதி முதல், இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக கால்நடை மருத்துவ பல்கலை அறிவித்துள்ளது.


பல்கலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய நகரங்களில், கால்நடை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு எனப்படும், பி.வி.எஸ்சி., - ஏ.ஹெச்., பட்ட படிப்புகள்; உணவு கோழியின மற்றும் பால்வள தொழில்நுட்பத்தில், பி.டெக்., படிப்புகள் உள்ளன. 


பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 2020 -21ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், வரும், 24ம் தேதி காலை, 10:00 மணி முதல், www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், இணையதளம் வாயிலாகவே, செப்., 28 மாலை, 6:00 மணிக்குள் பதிவேற்ற வேண்டும்.அயல்நாடுவாழ் இந்தியர், அயல்நாடுவாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டின மாணவர்களும், இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அக்., 23 மாலை, 6:00 மணிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். பிற வடிவ விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.தகவல் தொகுப்பேடு, சேர்க்கை தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றும் இதர விபரங்கள் இணையதளத்தில் உள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி