பள்ளி , கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? 25ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு. - kalviseithi

Aug 21, 2020

பள்ளி , கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? 25ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளிகள் எப்போது திறக்கப்படும் ? வகுப்புகள் எப்போது தொடங்கப்படும் ? பள்ளி , கல்லூரி மற்றும் பாலிடெக்னிக்குகள் எப்போது திறக்கப்படும். 11 ஆம் வகுப்பு சேர்க்கையை நிறுத்திவைக்கக் கோரிய வழக்கில் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

மேல்நிலை பள்ளி வகுப்புகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் எப்போது துவங்கப்பட உள்ளது என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாத இறுதியில் 10 வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், பள்ளிகளில் படிக்காமல் நேரடியாக பத்தாம் வகுப்புக்கு தேர்வு எழுத ஹால் டிக்கெட் பெற்றிருந்த தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரி, கோவையை சேர்ந்த வருண்குமார் என்ற தனித்தேர்வரின் தந்தை  பொறியாளர் எஸ்.பாலசுப்ரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையும் ஆகஸ்ட் 24ல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனி தேர்வர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்காமல்  பாரபட்சம் காட்டுவதால், அவர்கள் ஒராண்டை இழக்க நேரிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனித்தேர்வர்களின் முடிவுகளை வெளியிடும் வரை, மேல் நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கையையும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையையும் தள்ளி வைக்க வேண்டும் எனவும், தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்து, மதிப்பெண் பட்டியலை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தனித்தேர்வர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 21ம் தேதி முதல் 26 வரை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், முடிவுகள் வெளியாக ஒரு மாதமாகும். ஆனால் மேல்நிலை வகுப்புகளுக்கு வரும் 24ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தனித்தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, மேல்நிலை வகுப்புகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் எப்போது துவங்கப்பட உள்ளது என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

12 comments:

 1. அப்படியா! உங்களுக்கு செப்டம்பர் 5 பள்ளி திறக்கப்படும். போங்கையா யோவ்! அதுவரை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஓசி சம்பளம் வாங்கிக்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. யோவ் உனக்கு திறமை இருந்தால் அரசு வேலைக்கு வந்து பாரு... அப்புறம் பேசு... கண்டத பேசாத..

   Delete
  2. என்னிடமெல்லாம் பேசி ஜெயிக்க முடியாது ஓசி சோறு.... வேலைக்கு போகாம சம்பளம் வாங்க கை கூசல... த் தூ... 😀😀😀😀😀

   Delete
  3. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏன் பேசுறீங்க என்றால் உங்களுக் எல்லாம் கோபம் பொத்துகிட்டு வருது..
   நாங்கள் யாரும் சும்மா சம்பளம் வாங்கவில்லை..
   நீ உனது id பெயர் இல்லாமல் unknown இருக்கிறது..
   நாங்கள் இந்த விடுமுறையில் வேலையில்,
   Result work, Admission,,TC issue, students noon meals things, Covid-19 velunteer work ,we donate ,Rice, vegetable,food,,JRC service work,
   Donate public - food, grocery,*விடுமுறை காலத்தில் ஆசிரியர்கள் ஆற்றிய பணிகள்*.

   அறியாதவர்கள் அறிந்து கொள்ள.....

   +2 தாள் திருத்தும் பணி.

   +1 தாள் திருத்தும் பணி.

   +1 விடுபட்டதாள் மதிப்பீடு
   செய்யும் பணி.

   + 1 வருகைப் பதிவேடு பதிவிடும் பணி.

   10_ ஆம் வகுப்பு தேர்வு என அறிவித்த நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள்.

   10 ஆம் வகுப்பு
   தேர்வு முடிவுகள்
   தயாரிக்கும் பணி.

   மாற்றி மாற்றி வந்த அறிவிப்புகளுக்கேற்ப
   மீண்டும் மீண்டும் தயாரித்தல்.

   +2 மாணவிகளுக்கு
   இலவச புத்தகம் வழங்கும் பணி.

   +2 பாடங்கள் வீடியோ
   மடிக்கணினியில் பதிவிட்டு வழங்கும் பணி.

   + 2. மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணி.

   +2 சிறப்புத் தேர்வு நடத்தி
   மதிப்பிட்டு முடிவு அறிவித்த பணி.


   1 - முதல் 8 வரை சத்துணவு பொருட்கள் வழங்கும் பணி.


   இலவசப் புத்தகங்கள் உரிய வகுப்புகளுக்கு வழங்கும் பணி.

   பாடக்குறிப்பேடுகள் வழங்கும் பணி.

   புத்தகப்பை வழங்கும் பணி.

   கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு சுழற்சி முறையில் பள்ளி பணிகளை மேற்கொள்ளுதல்.

   புலனத்தின் வழி குழந்தைகளுக்கு பாடக் குறிப்புகள் வழங்கி
   பாடப் பணிசெய்தல்.

   மேற்படிப்புக்கான வழிகாட்டும் பணி.

   மாணவர்களுக்கிடையே இணையம் மூலமாக (ஓவியம், கட்டுரை) போட்டிகள் நடத்தி முடிவுகள் அனுப்புதல்

   கணினி வழி பாடப் பயிற்சிகள்
   பாடம் நடத்துதல்

   வீடியோ பதிவிடல்.

   பாடப் பகுதி குறைப்பு முகாம்.

   தொலைக்காட்சி படப்பதிவு.

   பயிற்சித்தாள் தயாரிப்பு......

   மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள்...

   தம் பள்ளி மாணவர்களுக்கு தம் சொந்த செலவிலேயே பண, பொருள் உதவி.

   அக்கம் பக்கத்தினருக்கு தானே சமைத்து அவர்களுக்கு வழங்குதல்.

   என இன்னும் பல பணிகள்
   பள்ளி திறந்து விட்டால் கூட பரவாயில்லை என்ற ஏக்கத்தோடு தான் இரு மடங்கு அதிகமாக உழைத்துக்
   கொண்டுள்ளனர்.


   சில பகுதிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள்
   நோய்தொற்றுக்கு உள்ளாகி
   சில தங்கள்
   இன்னுயிரை
   ஈந்தும் பணியாற்றி வருகிறார்கள்.

   என்பதை அறிந்தும் அறியாமல் இருப்பது போல் தவறாகத் தகவல் பரப்புபவர்கள் அறிந்து கொள்ளவே இப்பதிவு.

   Delete
  4. Endha mathri person learn lesson from russia president

   Delete
 2. Government staff ku aedachu vaelaikudukanum o c kaas vaanguraanga

  ReplyDelete
  Replies
  1. Ippadi aduthavana pathi pesitu irukama nee thiramai iruntha EXAM yeluthu velaiki po, innum konjam Nalthan north Indian inga vanthu velai parpan nee avana vedikkai parthutu iru

   Delete
  2. யோவ்... திறமை இருக்கு. வேலை செஞ்சிட்டுத்தான் இருக்கோம். உன்னப் போல ஓசி கஞ்சி குடிக்கல.... 😀😀😀😀😀

   Delete
  3. நீங்களும் அரசு வேலைக்கு வந்தால் உங்களையும் மற்றவர் இப்படித்தான் பேசுவார் என்ற எண்ணம் உங்களுக்கு வரவேண்டும்

   Delete
 3. Any news about of trb chemistry posting 2019

  ReplyDelete
 4. மேலே சொல்லப்படும் செய்திக்கும், சில பண்ணாடைகளின் கருத்திற்கும் தொடர்பே இல்லையே.

  அநாகரீகமான கருத்துக்கள், admin கண்ணுக்கு தெரியாதா.

  ReplyDelete
 5. தேவிடியா மவனே admin ஆசிரியர்கள் பற்றி அவதூறு கருத்தை பரப்பும் இது போன்ற நாதரிகள் கமன்ட் தடை செய் இல்லை என்றால் உன் அம்மா புண்ட நாரி போய்விடும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி