பணம் செலுத்தினாலும் செலுத்தாவிட்டாலும் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியீடுக..! அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2020

பணம் செலுத்தினாலும் செலுத்தாவிட்டாலும் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியீடுக..! அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு.

 

பணம் செலுத்தினாலும் செலுத்தாவிட்டாலும் செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்கும் கல்லூரி படிக்கும் மாணவர்கள் 2 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் சார்பாக மூத்த வக்கீல் கே.துரைசாமி ஆஜராகி அண்ணா பல்கலைகழகம் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டு விட்டது. செமஸ்டர் தேர்வு கட்டணத்தை செலுத்தாத மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட முடியாது என்று அறிவித்து விட்டது. 


இதனால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவே பணம் கட்டினாலும் கட்டாவிட்டாலும் அனைத்து மாணவர்கள் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கூறினார். அண்ணா பல்கலையின் சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் ஆஜராகி இந்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் கேட்டார். இதைக் கேட்ட நீதிபதி செமஸ்டர் செமஸ்டர் கட்டணம் செலுத்தினாலும் செலுத்தாவிட்டாலும் மாணவர்களுடைய தேர்வு முடிவுகளை உடனே அண்ணா பல்கலை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கில் அரசும், அதிகாரிகளும் பதிலளிக்க விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி