பெற்றோர் குவிந்ததால் சிவகங்கை நகராட்சிப் பள்ளியில் 6-ம் வகுப்பில் கூடுதலாக 200 இடங்கள்: நாளை முதல் மாணவர் சேர்க்கை! - kalviseithi

Aug 31, 2020

பெற்றோர் குவிந்ததால் சிவகங்கை நகராட்சிப் பள்ளியில் 6-ம் வகுப்பில் கூடுதலாக 200 இடங்கள்: நாளை முதல் மாணவர் சேர்க்கை!


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிப் பள்ளியில் 6-ம் வகுப்பில் விண்ணப்பித்த மாணவர்கள் பலருக்கும் இடம் கிடைக்காததால், கூடுதலாக 200 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளி 2013-2014-ம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

அப்போது 6 ஆசிரியர்களும், 218 மாணவர்களும் இருந்தனர். தலைமை ஆசிரியர் ஆ. பீட்டர்ராஜா முயற்சியால் தனியார் பள்ளிகளைப் போன்று சீருடை, டை, ஷூ அணியும் முறை இங்கு கொண்டு வரப்பட்டது. இது பெற்றோரிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

2014- 2015-ம் கல்வியாண்டில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது. தரம் உயர்த்தப்பட்டதில் இருந்தே 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற்று வருகிறது. இதனால் மாணவர் எண்ணிக்கையும் படிப் படியாக உயர்ந்தது.

கடந்த ஆண்டே 1,325 மாணவர்கள் படித்தனர். கரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர் சேர்க்கை ஆக.17-ம் தேதி நடந்தது. 200 இடங்களே உள்ள 6-ம் வகுப்பிற்கு 700 பேர் இடம் கேட்டு குவிந்தனர்.

இதனால் சில மணி நேரத்திலேயே மாணவர்கள் சேர்க்கை முடிந்ததால், பலரும் தங்களது குழந்தைகளுக்கு இடம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதையடுத்து 6-ம் வகுப்பில் கூடுதலாக 200 மாணவர்களை சேர்க்கவும், கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டவும் கல்வித்துறை உத்தரவிட்டது. மேலும் இன்று முதல் அப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி