ஆசிரியர் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படுமா? - kalviseithi

Aug 31, 2020

ஆசிரியர் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படுமா?*கோவை மாவட்ட அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை, பதவி உயர்வு வாயிலாக நிரப்ப, விரைவில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்; அப்போதுதான் பள்ளிகள் திறந்த பின், கற்பித்தலில் மட்டும் ஆசிரியர்களால் கவனம் செலுத்த முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.*


*அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் மே மாத இறுதியில், பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம்.ஜூன் இறுதிக்குள், பதவி உயர்வு, பணியிட மாறுதல் பெற்றவர்கள், அந்தந்த புதிய பள்ளிகளுக்கு சென்று பணியில் சேர வேண்டும்*


*ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள இச்சூழலில், வரும் செப்., இறுதி வரை, மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.* ஆனால், கலந்தாய்வு நடத்துவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.*

*மத்வராயபுரம், தொண்டாமுத்துார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குறிச்சி, தடாகம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வெள்ளக்கிணறு உட்பட, 20க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

*இதேபோல், பாடவாரியாக, 35 முதுகலை பட்டதாரி ஆசிரியர் இடங்களும் காலியாக உள்ளன.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தணிக்கையாளர் அருளானந்தம் கூறியதாவது:மே மாதத்துக்கு பின், பணி ஓய்வு பெற்றவர்களுக்கே, ஓராண்டு நீட்டித்து பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.*

 *மார்ச், ஏப்ரல் மாதங்களில் பணி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில், சமீபத்தில் தலைமையாசிரியர் பணிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. அது போல், பிற மாவட்டங்களிலும், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தலாம். பள்ளிகள் திறந்த பின் கற்பித்தல் பணிகளில் மட்டும், ஆசிரியர்கள் கவனம் செலுத்த,* 


*இது வசதியாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.ஆன்லைன் வாயிலாக, சமூக இடைவெளியை பின்பற்றி, பதவி உயர்வுக்கான கலந்தாய்வை மட்டுமாவது நடத்த வேண்டும்;* 

முதுகலை பட்டதாரி, தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பினால் தான், சேர்க்கை, கற்பித்தல் பணிகள் தேக்கமின்றி நடக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்.கவனத்தில் கொள்ளுமா, நம் பள்ளிக்கல்வித்துறை?''சென்னை மாநகராட்சி சார்பில், சமீபத்தில் தலைமையாசிரியர் பணிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது.* 


*அது போல், பிற மாவட்டங்களிலும், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தலாம்.*

 *பள்ளிகள் திறந்த பின் கற்பித்தல் பணிகளில் மட்டும், ஆசிரியர்கள் கவனம் செலுத்த, இது வசதியாக இருக்கும்,''ஆன்லைன் வாயிலாக, சமூக இடைவெளியை பின்பற்றி, பதவி உயர்வுக்கான கலந்தாய்வை மட்டுமாவது நடத்த வேண்டும்;*

 *முதுகலை பட்டதாரி, தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பினால் தான், சேர்க்கை, கற்பித்தல் பணிகள் தேக்கமின்றி நடக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்.*

14 comments:

 1. அவனவன் வேலையே இல்லன்னு கிடக்கிறான் இவங்களுக்கு பதவி உயர்வு வேணுமா

  ReplyDelete
 2. 20 ஆண்டுகளுக்கு பணிநியமனம் இருக்காது உபரி ஆசிரியர்கள் அதிகம் உள்ளனர்

  ReplyDelete
  Replies
  1. Dai unknown yenda unakku intha vayitherichal

   Delete
  2. நல்ல எண்ணம்.வாழ்க வளமுடன்.

   Delete
  3. நல்ல எண்ணம்.வாழ்க வளமுடன்.

   Delete
  4. நண்பா எண்ணம் போல் வாழ்க்கை அமையும் என்பதை மனதில் கொள்

   Delete
 3. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
  மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
  தவித்து வருகிறார்கள்.

  ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
  பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

  ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
  மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
  கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
  ஏற்பட்டுள்ளது.

  ஆசிரியர் பணிநியமனம் செய்ய
  போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று
  தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
  அவர்களை பணியமர்த்த வேண்டும்

  தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
  என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
  கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
  ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
  பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக
  முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று
  பணிவழங்க வேண்டும்
  ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைக்கும் வரை
  மாதம் 5000 என்ற அடிப்படையில் உதவிதொகை வழங்கவேண்டும்

  பள்ளியில் உபரி ஆசிரியகள் அதிகம் இருப்பின் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி
  பெற்றவர்களை நியமிக்கவேண்டும்

  TNPSC போன்ற தேர்வுகளில் 25% காலி பணியிடங்களுக்கு TET
  தேர்ச்சிபெற்றவர்களை
  நியமித்து
  அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

  ReplyDelete
 4. Intha TET thollai thanka mudiyala. Ethukku eduthalum ithana. Innum PG chemistry, Computer teachers, special teachers, PET, DEO exam result, ivlo per irukkanka ennamo neenka mattum irukka mari eppo parthalum veruppai earpadutjureenka

  ReplyDelete
 5. 2019 November la transfer aana double teacher candidate ku reliving kuduka korikkai vainga

  ReplyDelete
 6. Sir if subject teacher VACANCY is there in school then how to study students, in my school days 12 th std Tamil period free period because teacher illa VACANCY, enjoy my school days but marks?O God Plz help us

  ReplyDelete
 7. Plz consider govt school students

  ReplyDelete
 8. எதுக்கு இப்ப கலந்தாய்வு டிஸ்ட்ரிக்ட் டிஸ்ட்ரிக்ட் மாற பணம் வாங்குவதற்கு, நாசமா போச்சு டீச்சர்ஸ் வாழ்க

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி