தற்காலிக ஊழியருக்கும் 9 மாத மகப்பேறு விடுப்பு - அரசாணை வெளியீடு. - kalviseithi

Aug 9, 2020

தற்காலிக ஊழியருக்கும் 9 மாத மகப்பேறு விடுப்பு - அரசாணை வெளியீடு.


தமிழக அரசு பணியில், நிரந்தரம் செய்யப்படாத பெண் ஊழியர்களுக்கும், ஒன்பது மாதங்கள் மகப்பேறு கால விடுப்பு அளிக்க, அரசு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழக அரசில், நிரந்தர பணியில் உள்ள, அரசு பெண் ஊழியர்களுக்கு, ஒன்பது மாதத்திற்கு, பேறு கால விடுப்பு வழங்கப்படுகிறது.சில துறைகளில், அவசர பணி நிமித்தமாக, தற்காலிகமாக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவ்வாறு நியமிக்கப்படும் ஊழியர்களில், பெண் ஊழியர்களுக்கு, பேறு காலத்தின் போது, ஈட்டிய விடுப்பு, 270 நாட்களுக்கு குறைவாக இருந்தாலும், அவர்களுக்கு முழு சம்பளத்துடன், 270 நாட்கள், பேறு கால விடுப்பு வழங்கலாம்


இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பெண்களுக்கும், முதல் பிரசவத்தில், இரட்டை குழந்தை பெற்ற பெண்களுக்கும், இரண்டாவது ஒரு முறை பேறு கால விடுப்பு வழங்கப்படும். குழந்தையை தத்தெடுத்து வளர்த்தால், இந்த சலுகை கிடையாது. இதற்கான அரசாணையை, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் ஸ்வர்ணா வெளியிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி