விரும்பிய அரசு கல்லூரி கிடைக்கவில்லையா... கவலை வேண்டாம்...! அரசின் புதிய திட்டம் தெரியுமா...? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2020

விரும்பிய அரசு கல்லூரி கிடைக்கவில்லையா... கவலை வேண்டாம்...! அரசின் புதிய திட்டம் தெரியுமா...?

அரசு கலைக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மூலம் மாணவர்கள் விரும்பிய  அரசு கல்லூரியை தேர்ந்தெடுத்து பயிலாம். இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பார்த்தசாரதி கூறுகையில், அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் வசதிக்காக தமிழகத்தில் உள்ள நூலகங்களில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 130 பாடப்பிரிவுகள் சார்ந்த பாடப்புத்தகங்களை 50 சதவிகித தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைக்க இருப்பதாக தெரிவித்தார் .


மேலும் தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட நூலகங்களில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயில்பவர்களின் வசதிக்காக பாடத்திட்டங்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் வைக்கப்பட்டு வாரந்தோறும் விரும்பும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த திட்டமிட்டு வருவதாக கூறினார்.


மத்திய அரசின் வழிகாட்டுதல்படி , தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக அவர்களின் குறைகளை தீர்க்க புதிய இணையதள பக்கம்  துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள 92,000 இடங்களுக்கு 3 லட்சம்  மாணவர்கள் விண்ணப்பித்து இருப்பதாக கூறினார்.


மேலும், அந்த கல்லூரிகளில் இடம் கிடைக்காத  மாணவர்கள் அவர்கள் விரும்பும் அரசு கல்லூரி மற்றும் விரும்பும் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் வாயிலாக பயில்வதற்கு பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி