அரசுப்பள்ளிகளுக்கு வந்தாச்சு நல்ல நேரம்! மாணவர் சேர்க்கை உயர்கிறது! - kalviseithi

Aug 21, 2020

அரசுப்பள்ளிகளுக்கு வந்தாச்சு நல்ல நேரம்! மாணவர் சேர்க்கை உயர்கிறது!


ஊரடங்கு காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இம்மாணவர்களை இடங்கள் நிரம்பியதாக கூறி, வெளியேற்ற கூடாதென பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 

அதே நேரம், இந்த நல்ல வாய்ப்பை தக்க வைக்க, பள்ளிகளில் கூடுதல் வகுப்பு பிரிவுகள் துவக்குவதற்கான அனுமதியை, பள்ளிக்கல்வித்துறை ஏற்படுத்தித்தர வேண்டும்.அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி கட்டணம் இல்லை. 14 வகையான நலத்திட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. 

அனு பவமிக்க ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர்.இருப்பினும், கட்டமைப்பு வசதியின்மை உள்ளிட்ட, சில காரணங்களால், கடந்த ஐந்து ஆண்டுகளாக சேர்க்கை சரிந்து வந்தது. மாணவர்களே சேராத பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இச்சூழலால், பணிவாய்ப்பு கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டது.வந்தது புது மாற்றம்!ஊரடங்கு காரணமாக, மீண்டும் அரசுப்பள்ளிகளை தேடி வரும், பெற்றோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 

தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வசதியில்லாதோரின் கவனம், அரசுப்பள்ளிகளின் பக்கம் திரும்பியுள்ளது. இது, ஆசிரியர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.இருப்பினும் குறிப்பிட்ட சில பள்ளிகளில் சேரவே, பெற்றோர் ஆர்வம் காட்டுவதால், சேர்க்கை உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

சேர்க்கை முடிந்தாலும், இக்குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டுமென, தலைமையாசிரியர்களுக்கு கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் வேல்ராஜ் கூறியதாவது:


அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி பிரிவு உள்ளதோடு, ஸ்மார்ட் வகுப்பறை, யோகா, கலைப்பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு மாறி வருகிறது. 

அனுபவமிக்க ஆசிரியர்கள் பணியில் உள்ளோம்.அரசுப்பள்ளிகளை தேடி வரும் குழந்தைகளை தக்க வைத்தால் தான், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும். உபரி ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படும் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.அரசுப்பள்ளிகளை தேடி வரும் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய, கல்வித்துறை முனைப்பு காட்ட வேண்டியது அவசியம். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அப்போது தான், இனிவரும் காலங்களிலும், இந்த நல்ல மாற்றம் தொடரும்.இவ்வாறு, அவர் கூறினார்.அரசுப்பள்ளி ஆசிரியர்களும் இந்த நிலைமையை உணர்ந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடம் கற்பிக்க வேண்டும். 

தேவைப்படும் பள்ளிகளில், அதிக மாணவர்களை சேர்க்க வசதியாக, கூடுதல் வகுப்பு பிரிவுகள் துவக்குவதற்கான அனுமதியை, பள்ளிக்கல்வித்துறை வழங்க வேண்டும்.'அட்மிஷன் வழங்க மறுக்கக்கூடாது'மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறுகையில், ''கடந்த 17ம் தேதி முதல், 19ம் தேதி வரை, அரசுப்பள்ளிகளில் 11 ஆயிரத்து 386 மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 ஆயிரத்து 300 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். 

சேர்க்கை முடிந்தாலும், அரசுப்பள்ளியை தேடி வரும் குழந்தைகளை, அருகாமையில் உள்ள வேறு அரசுப்பள்ளியில் சேர்க்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளை தேடி வரும் மாணவர்களுக்கு, எக்காரணம் கொண்டும், 'அட்மிஷன்' மறுக்கப்படாது,'' என்றார்.

18 comments:

 1. அரசு ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் ஆசிரயரல்லாத பணியங அனைத்தையும் உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. தமிழக அரசு அதற்கான நடவடிகைகளை விரைவாக எடுக்க வேண்டும்.

   Delete
  2. Corona va karanam solluvanga ipo

   Delete
 2. 2013 pass pannavangaluku this month ending kulla counseling varumnu solranga... Is it true?

  ReplyDelete
 3. 2013 Tet counseling already vachu posting potachu? any chance for2017 and 2019 batch?

  ReplyDelete
 4. Fist 2013 tet pass caditaded must 82000 paru passpanunanga athil 23000 peru matum posting poranga only first 2013 batch pasting podunga sir

  ReplyDelete
 5. All tet pass candidate ready for next exam

  ReplyDelete
 6. I appriciate the efforts of all the govt & aided teachers as the strength has increased.

  ReplyDelete
 7. Teacher vacant 7 year not take the requirtments so election nearst so large vacant will be filling the goverment so wait for to all

  ReplyDelete
 8. Ella tet pass batch.la irundhu merit list podunga.... 2013 2014 2017 2019 partiality vendam...

  ReplyDelete
 9. Nep 2020 district wise teacher appoinment so wait for all district people

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி