ஆசிரியர் பயிற்சி நிறுவன சேர்க்கை ஆன்லைன் பதிவு இன்று துவக்கம் - kalviseithi

Aug 17, 2020

ஆசிரியர் பயிற்சி நிறுவன சேர்க்கை ஆன்லைன் பதிவு இன்று துவக்கம்

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும், கல்வியியல் பயிற்சி நிறுவனங்களில், டிப்ளமா படிப்பில் சேருவதற்கான, விண்ணப்பப் பதிவு இன்று துவங்குகிறது.


தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அங்கமாக செயல்படும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ், மாவட்ட வாரியாக, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன.அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், டி.எல்.எட்., என்ற, டிப்ளமா கல்வியியல் பயிற்சி படிப்பு நடத்தப்படுகிறது. 


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இந்த படிப்பில் சேரலாம்.இந்த டிப்ளமா முடித்தோர், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதி தேர்வில் பங்கேற்று, தொடக்க கல்வி வகுப்புகளுக்கு ஆசிரியர் பணியில் சேரலாம்; நேரடியாக பட்டப்படிப்பிலும் சேர முடியும்.இந்த ஆண்டில், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், டி.எல்.எட்., மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று துவங்க உள்ளது.


இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், www.tnscert.org என்ற இணையதளத்தில், இன்று முதல் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்ப விபரங்களை, 28ம் தேதி மாலை, 5:00 மணி வரை பதிவேற்றலாம்.நிதி உதவி பெறும் நிறுவனங்கள், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட, தனியார் நிறுவனங்களில் படிக்க விரும்புவோர், அந்தந்த நிறுவனங்களின் இணையதளங்கள் வழியே விண்ணப்பிக்க வேண்டும். தனியார் நிறுவனங்களின் முகவரிகள், www.tnscert.org என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

1 comment:

 1. 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற நலச்சங்கம்.


  எங்களது கோரிக்கையை ஏற்று
  உள்ளது உள்ளபடி ஆளும் அரசை கண்டித்தும் மிகச்சிறப்பான காணொலி வெளியிட்ட நண்பர் துரைமுருகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

  காணொலி காண
  சாட்டை சானலை பார்க்கவும்.
  லிங்க்
  https://youtu.be/yn7QZfhXlIE  எங்களாடு இணைந்து களம் காண விரும்பும்
  2013 ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தேர்வர்கள் மட்டும்.
  கீழ்கண்ட வாட்ஸ்அப்குழுவில் இணையுங்கள்.

  வாட்ஸ்அப் லிங்க்

  https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

  2013 ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி