10th Mark Sheet - இன்று முதல் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2020

10th Mark Sheet - இன்று முதல் பள்ளிகளில் வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், இன்று(ஆக.,17) முதல் வழங்கப்படுகிறது.


ஊரடங்கு காரணமாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில், தேர்ச்சி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு, இம்மாதம், 10ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாயின.


இதையடுத்து, மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், இன்று முதல் பள்ளிகளில் வழங்கப்பட உள்ளன. வரும், 21ம் தேதி வரை, பள்ளிகளில் சான்றிதழ்களை பெறலாம்.vஅதேபோல, மதிப்பெண்களில் குறைவு இருப்பதாக கருதும் மாணவர்கள், மறுகூட்டலுக்கு பதில், குறைதீர் விண்ணப்பத்தை, பள்ளி தலைமை ஆசிரியரிடம் அளிக்க வேண்டும்.


இன்று முதல், 25ம் தேதி வரை, இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தேர்வு துறைக்கு அனுப்பப்படும். அதன்பின், மதிப்பெண் இறுதி நிலை குறித்து, மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என, அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

3 comments:

  1. 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற நலச்சங்கம்.


    எங்களது கோரிக்கையை ஏற்று
    உள்ளது உள்ளபடி ஆளும் அரசை கண்டித்தும் மிகச்சிறப்பான காணொலி வெளியிட்ட நண்பர் துரைமுருகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    காணொலி காண
    சாட்டை சானலை பார்க்கவும்.
    லிங்க்
    https://youtu.be/yn7QZfhXlIE



    எங்களாடு இணைந்து களம் காண விரும்பும்
    2013 ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தேர்வர்கள் மட்டும்.
    கீழ்கண்ட வாட்ஸ்அப்குழுவில் இணையுங்கள்.

    வாட்ஸ்அப் லிங்க்

    https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

    2013 ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்

    ReplyDelete
  2. 10th private candisate result pls

    ReplyDelete
  3. 10th private candisate result pls

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி