அரசு கல்லூரிகளில் பணியாற்றும்எம்.எட்., தகுதி பேராசிரியர்களை பி.எட்., கல்லூரிகளுக்கு மாற்ற திட்டம் - kalviseithi

Aug 26, 2020

அரசு கல்லூரிகளில் பணியாற்றும்எம்.எட்., தகுதி பேராசிரியர்களை பி.எட்., கல்லூரிகளுக்கு மாற்ற திட்டம்

தமிழகத்தில் அரசு கல்லுாரிகளில் பணியாற்றும் எம்.எட்., தகுதி பெற்ற உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்துள்ளது. 


இவர்களை அரசு கல்வியியல் (பி.எட்.,) கல்லுாரிகளுக்கு மாற்றம் செய்ய கல்லுாரிக் கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.மாநில அளவில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. சில பல்கலை உறுப்புக் கல்லுாரிகளும் அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்டுள்ளன. இங்கு எம்.எட்., மற்றும் நெட், ஸ்லெட் அல்லது பிஎச்.டி., முடித்து நுாற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.


இவர்கள் தொடர்பான விவரங்களை கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர்கள் சேகரித்து இயக்குநர் பூரணச்சந்திரனுக்கு அனுப்பியுள்ளனர். அரசு பி.எட்., கல்லுாரிகளுக்கு இவர்களை மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த முடிவால் கலைக் கல்லுாரி சீனியர் பேராசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அரசு கலைக் கல்லுாரிகளில் 2012க்கு பின் நியமனம் இல்லை. எம்.எட்., தகுதியுள்ளோர் தற்போது 'கல்லுாரி முதல்வர்' பதவி உயர்வு பட்டியலில் உள்ளனர்.இவர்கள் பி.எட்., கல்லுாரிகளுக்கு மாற்றப்பட்டால் ஜூனியர் நிலையில் அங்கு பணியை தொடர வேண்டும். மேலும் சென்னை, புதுக்கோட்டை உட்பட சில மாவட்டங்களில் தான் பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இதனால் பணியிட மாற்றம் என்பது பெரும் சுமையாக இருக்கும். எனவே விருப்பம் உள்ளோரை மட்டும் மாற்றம் செய்ய வேண்டும் என போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி