கல்லுாரியில் ஷிப்ட் முறை ரத்து மாணவர் எண்ணிக்கை குறையும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2020

கல்லுாரியில் ஷிப்ட் முறை ரத்து மாணவர் எண்ணிக்கை குறையும்?

அரசு கல்லுாரிகளில், 'ஷிப்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், வேலைக்கு சென்று படித்த மாணவர்கள், பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அரசு கல்லுாரிகளில், காலை மற்றும் மதியம் என, 'ஷிப்ட்' முறையில் வகுப்புகள் நடந்தன. 


பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், பெரும்பாலும் அரசுக்கல்லுாரியில் படிக்கின்றனர்.தற்போது, 'ஷிப்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், அரசு கல்லுாரியில், மாணவர் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.


கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது:கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட தொழில் நகரங்களில், ஷிப்ட் முறையில், கல்வி பயிலும் மாணவ - மாணவியர், பின்னலாடை நிறுவனங்களுக்கு, பகுதி நேரமாக வேலைக்கு சென்று சம்பாதிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.


நீலகிரி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா நகரங்களில், கல்லுாரி படிப்புடன், பகுதி நேரமாக, ஓட்டல் உட்பட சுற்றுலா சார்ந்த பணிகளில், தங்களை ஈடுபடுத்தி வந்தனர். தற்போது, ஷிப்ட் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி, பாதிக்கும் சூழல் உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி