கால்நடை மருத்துவ படிப்பு இன்று முதல் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2020

கால்நடை மருத்துவ படிப்பு இன்று முதல் விண்ணப்பம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை, இன்று முதல், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.


கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய நகரங்களில், கால்நடை மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு எனப்படும், பி.வி.எஸ்சி., - ஏ.ஹெச்., படிப்புகள் உள்ளன. 


மேலும், உணவு கோழியின் மற்றும் பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் எனப்படும், பி.டெக்., படிப்புகள் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.நடப்பு, 2020 - 21ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இன்று காலை, 10:00 மணி முதல், www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இணையதளம் வாயிலாகவே, செப்., 28 மாலை, 6:00 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதேபோல், வெளிநாடு வாழ் இந்தியர், அவர்களின் குழந்தைகள் மற்றும் அவர்களின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் வெளிநாட்டு மாணவர்களும், இன்று முதல், இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.'பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அக்., 23க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி