சுதந்திர தின விழா பள்ளிகளில் நடக்குமா? : அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Aug 7, 2020

சுதந்திர தின விழா பள்ளிகளில் நடக்குமா? : அமைச்சர் செங்கோட்டையன்


''பள்ளிகளில், ஆக., 15ல், சுதந்திர தினம் கொண்டாடுவது குறித்து, முதல்வர் தான் முடிவு செய்வார்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 

ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று அவர் கூறியதாவது:கொரோனா தொற்று சமயத்தில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், ஆக., 15ல், சுதந்திர தினம் கொண்டாடுவது குறித்து, முதல்வர் தான் முடிவு செய்வார்.தமிழகத்தில், பள்ளிகள் திறப்பு குறித்து, பெற்றோர் - ஆசிரியர் சங்கம், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. 

கொரோனா தொற்று சூழலில், தற்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை.படிப்படியாக தொற்று குறைந்த பின், மீண்டும் மக்களின் கருத்துகளை அறிந்து, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, வகுப்பு வாரியாக, காலணி மற்றும் ஷூ வழங்குவது குறித்து, ஆக., 10ல் முதல்வர் முடிவு செய்து அறிவிப்பார். 10ம் வகுப்பினருக்கு, முதல்வர் தேதி அறிவித்த பின், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

5 comments:

 1. #ஆசிரியர்_தகுதித்தேர்வு_சான்றிதழ்_காலத்தை_ஆயுட்காலமாக்க_வேண்டும்.!

  #மஜக_பொதுச்செயலாளர்_மு_தமிமுன்_அன்சாரி_MLA_அறிக்கை!

  2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 80,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணி நியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

  ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக ஒரு ஆசிரியர் பணி நியமனம் கூட மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க செய்துவிடும்.

  மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என கூறப்பட்டுள்ளது.

  இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

  பிகார், அரியானா போன்ற மாநில அரசுகள் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை ஏற்கனவே நீட்டித்தது போல தமிழக அரசும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை நீட்டித்து தர வேண்டும்.

  மேலும் ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ள போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில் அவர்களை பணியமர்த்த ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

  தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அதிமுக அரசுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  அவர்களது நியாயமான நீண்டகால கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.


  மு.தமிமுன் அன்சாரி MLA,
  #பொதுச்செயலாளர்,
  #மனிதநேய_ஜனநாயக_கட்சி


  நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

  2013 ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு

  2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்

  2013 ம் ஆண்டு ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று கடந்த ஏழாண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவரா? நீங்கள்


  வாட்ஸ்அப் குழுவில் இணைய
  *What's app*:
  https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

  ReplyDelete
  Replies
  1. ஐயா இது என் தனிப்பட்ட கருத்து. தயவு செய்து தவறாக கொள்ள வேண்டாம்.

   இன்றைய சூழலில் பள்ளி கல்வித்துறை ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாக உள்ளனர், மேலும் மாணவர் சேர்க்கையும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே தகுதி தேர்வு சான்றை ஆயுட்காலம் செல்லுபடி ஆக்கினாலும் அதனால் பயன் இருக்கும் என எனக்கு தெரியவில்லை..

   எனவே அதனை நம்பி இல்லாமல், வேறு தேர்வு எழுதி பணிக்கு செல்ல முயற்சிப்பது நல்லது என நான் நினைக்கிறேன்.

   Delete
 2. சரியான பதிவு,எனது அனுபவத்தில் ஏன் கல்லூரி தோழர்கள் இருவர் M.Sc.,M.Ed
  1990 முடிந்து ஆசிரியர் பணிக்கு 2006 வரை அரசு ஆசிரியர் பணியை கிடைக்கும் என எண்ணி திருமணமும் செய்யாமல் தனியார் பள்ளிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றி பின் 42 வயதில் 2006ல் அரசு ஆசிரியராக பணி கிடைத்தது பிறகு திருமணம் இப்போது குழந்தை இல்லை இது ஒருவரின் வாழ்க்கை.மற்றெருவர் Computer PGDCA
  One year course முடிந்து தனியார் IBM ல் 1991ல் பணியில் சேர்ந்தார் இன்று பல நாடுகள் பணி நிமித்தம் சென்று மாதம் 2.5 லட்சம் ஊதிய த்துடன் பெங்களூரில் இரண்டு குழந்தைகள்,ஒரு பிள்ளை க்கு திருமணம் முடிந்து பேரப்பிள்ளைகளுடன் வாழ்க்கை இருவரில் எவர் முடிவு சிறந்தது அரசு ஆசிரியர் பணியை நம்பாமல் எங்கள் திறமையை மீது நம்பிக்கை வைத்து பிற
  பணிக்கு முயற்சி செய்து உங்கள் வாழ்க்கை மை செம்மையாக்கி கொள்ளவும் (எதை இழந்தாலும் திரும்ப பெறாலம் வயதை பெற இயலாது )
  அரசு பணி அரசு கெடுக்கும் வரை காத்திருந்தால் ஆண்டியாக தான் போகணும்....இது எனது நண்பர் இருவரின் வாழ்க்கை கதை...

  ReplyDelete
  Replies
  1. Govt ok than athukuga.. Wait pannite irukurathu thappu, vera job pathutu parallel ah prepare pannanun, summa seniority la varum, tet la varum, net la varumna...
   Varave varathu

   Delete
 3. Iyya jali mitai kodukka porangala.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி