தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் - சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை! - kalviseithi

Aug 31, 2020

தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் - சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!


தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் 1,700 ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 1,700 ஆசிரியர்கள் 2010 - ம் ஆண்டு பணியில் சேர்ந்தனர். இந்நிலையில் , மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் தகுதித் தேர்வு ( டெட் ) 2010 - ம் ஆண்டு ஆக.23 - ம் தேதி கட்டாயமாக்கப்பட்டது. இதையடுத்து , தமிழகத்தில் ஆசிரியர் பணிக்குத் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம் என்று பள்ளிக் கல்வித்துறை 2012 நவம்பர் 16 - ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டது. மேலும் , இத்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்கள் , அரசு பணியில் தொடர வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டது.


இதை எதிர்த்து அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விலக்குப் பெற்றனர். ஆனால் , அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளைச் சேர்ந்த 1,700 ஆசிரியர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படவில்லை. இது குறித்து தகுதித் தேர்வு நிபந்தனை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கூறியதாவது :


பள்ளிக் கல்வித்துறை 2012ல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பே 2010 - ம் ஆண்டு பணியில் சேர்ந்துவிட்டோம். அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளித்ததுபோல் , சிறுபான்மையற்ற பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளாகப் பணிபுரியும் எங்களுக்கும் விலக்கு அளிக்க முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி