ஓய்வூதியர்களுக்கு உதவ ஜீவன் பிரமாண்; வாழ்நாள் சான்றிதழ் ஆன்லைனில் பெறலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2020

ஓய்வூதியர்களுக்கு உதவ ஜீவன் பிரமாண்; வாழ்நாள் சான்றிதழ் ஆன்லைனில் பெறலாம்


ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க மத்திய அரசின் jeevanpramaan.gov.in என்ற இணையதளம் உதவுகிறது.


ஓய்வூதியர்கள் ஒவ்வொரு ஆண்டும் அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று தங்கள் இருப்பை பதிவு செய்வர். இதற்கு பதில் ஓய்வூதியர்கள் உயிருடன் இருப்பதை டிஜிட்டல் சான்று வழி அரசுக்கு உறுதி செய்ய 2014ல் 'ஜீவன் பிரமாண்' திட்டத்தை பிரதமர் மோடி துவங்கினார்.


ஜீவன் பிரமாண் இணையதளத்தில் 'கெட் ஏ சர்டிபிகேட்' கிளிக் செய்ததும் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போனுக்குரிய செயலி, மென்பொருள் பதிவிறக்க லின்க் வரும். அதை பதிவிறக்கி, 'ஜெனரேட் லைவ் சர்டிபிகேட்' கிளிக் செய்து அலைபேசி எண், ஆதார் எண், கருவிழி, கைரேகை பதிவு செய்ய வேண்டும். அதன்பின் போனுக்கு வரும் ஓ.டி.பி.,யை வைத்து சான்றிதழ் பெறலாம்.


மென்பொருள், செயலி பயன்படுத்த தெரியாதோர் 'கெட் ஏ சர்டிபிகேட்' பிரிவில் 'ஆபிசஸ்' லின்க் கிளிக் செய்ததும் வரும் 'லொக்கேட் சென்டர்' பக்கத்தில் லொக்கேஷன், பின்கோடு என விரும்பியதை தேர்வு செய்யவும். பின் சிட்டிசன் சர்வீஸ் சென்டர், கவர்மென்ட் ஆபீசஸ் என ஒன்றை கிளிக் செய்து மாநிலம், மாவட்டம் கொடுத்து அருகிலுள்ள 'ஜீவன் பிரமாண்' சேவை மையங்களை அறியலாம். அங்கு தகவல்களை கொடுத்து பிரமாண் ஐ.டி.,பெற்று ஆன்லைனில் சான்றிதழ் பெறலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி