அரசு பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் நியமிக்கணும்! - kalviseithi

Aug 29, 2020

அரசு பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் நியமிக்கணும்!


அரசுப்பள்ளிகளில் அதிக மாணவர்கள் ஆர்வமாக சேரும், ஆங்கில வழி பிரிவுக்கு, பிரத்யேக ஆசிரியர்களோ, வகுப்பறையோ இல்லாத நிலை உள்ளது. ஆங்கில ஆசிரியர்களை நியமித்து, உயர்ந்து வரும் மாணவர் சேர்க்கை வாய்ப்பை, கல்வித்துறை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.


தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு அரசுப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதிலும், தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களின் தேர்வு, ஆங்கில வழி பிரிவாகவே உள்ளது.


இப்பிரிவை துவக்கினால், அரசுப்பள்ளிகளில் சேர்க்கை அதிகரிக்கும் என, முன்னாள் முதல்வர் ஜெ., சட்டசபையில் தெரிவித்தார். இதன்படி, 2012 முதல், துவங்கப்பட்ட ஆங்கில வழி பிரிவு, படிப்படியாக அதிகரித்து தற்போது, 90 சதவீத அரசுப்பள்ளிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள் இல்லையே!தமிழ் வழியை விட, ஆங்கில வழியில் சேர்க்க, பெற்றோரும் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். குறைந்தபட்சம் 15 மாணவர்களுக்கு மேல் இருந்தால், பிரத்யேக பிரிவு உருவாக்கலாம். இச்சூழலில், அதிக மாணவர்கள் இப்பிரிவில் சேர்ந்தும், பிரத்யேக ஆசிரியர் நியமிக்க அரசு முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், வாரத்திற்கு 28 பாடப்பிரிவுகள் கையாள வேண்டும். கூடுதலாக சில பள்ளிகளில் 35 பாடப்பிரிவுகள் வரை ஒதுக்கப்படுகின்றன.பி.டி.ஏ., ஆசிரியர்களுக்கு ஊதியம்இதற்கு மேல், வகுப்பு நடத்த முடியாத சூழலால், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


இந்த ஆசிரியர்களுக்கான ஊதியத்தையும் அரசு வழங்குவதில்லை. மாணவர்களிடமோ, தன்னார்வலர்கள் மூலமாகவோ, ஊதியம் வழங்க ஏற்பாடு செய்வதற்குள், தலைமையாசிரியர்கள் படாதபாடுபட வேண்டியுள்ளது.


தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில ஆலோசகர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''ஆங்கில வழி பிரிவுக்கு, பிரத்யேக கால அட்டவணை தயாரிக்கப்படுகிறது.


ஆசிரியர்கள் இல்லாமல், இம்மாணவர்களுக்கு எப்படி வகுப்பு கையாள முடியும்? சேர்க்கை இரு மடங்காக உயர்ந்தும், சில பள்ளிகளுக்கு கூடுதல் பணியிடம் வழங்கப்படுவதில்லை.


அந்தந்த ஆண்டுக்கான சேர்க்கை அடிப்படையில், பணியிடங்கள், பணிநிரவல் செய்ய வேண்டும். ஆங்கில வழி பிரிவை, ஆசிரியர் நியமனத்தில் கருத்தில் கொள்வதே இல்லை.பிரத்யேக பிரிவு உள்ள பள்ளிகளில், கூடுதல் பணியிட விபரங்களை திரட்டி, விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கவும், பணியிடங்களை அதிகரிக்கவும், கல்வித்துறை முன்வர வேண்டும்,'' என்றார்.ஆங்கில வழி பிரிவை, ஆசிரியர் நியமனத்தில் கருத்தில் கொள்வதே இல்லை. 


பிரத்யேக பிரிவு உள்ள பள்ளிகளில், கூடுதல் பணியிட விபரங்களை திரட்டி, விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கவும், பணியிடங்களை அதிகரிக்கவும், கல்வித்துறை முன்வர வேண்டும்,இது போன்ற வாய்ப்புமீண்டும் கிடைக்காது!மாநிலம் முழுக்க, உபரி ஆசிரியர்கள் கணக்கில் எடுத்து, கடந்த இரு ஆண்டுகளாக, பணிநிரவல் செய்யப்பட்டது. 


இந்த ஆசிரியர்களை ஆங்கில வழி பிரிவுக்கு நியமித்திருக்கலாம். டெட் தேர்வில் வெற்றி பெற்று, காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு, பணி வாய்ப்பு வழங்கலாம். சேர்க்கை அதிகரித்துள்ள இச்சூழலில், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்காவிடில், அரசுப்பள்ளிகள் மீதான நம்பிக்கையை, பொதுமக்கள் மத்தியில் மீண்டும் ஏற்படுத்துவது இயலாத காரியமாகிவிடும் என்பது, கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

11 comments:

 1. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
  மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
  தவித்து வருகிறார்கள்.

  ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
  பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

  ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
  மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
  கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
  ஏற்பட்டுள்ளது.

  ஆசிரியர் பணிநியமனம் செய்ய
  போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று
  தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
  அவர்களை பணியமர்த்த வேண்டும்

  தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
  என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
  கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
  ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
  பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக
  முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று
  பணிவழங்க வேண்டும்
  ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைக்கும் வரை
  மாதம் 5000 என்ற அடிப்படையில் உதவிதொகை வழங்கவேண்டும்

  பள்ளியில் உபரி ஆசிரியகள் அதிகம் இருப்பின் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி
  பெற்றவர்களை நியமிக்கவேண்டும்

  TNPSC போன்ற தேர்வுகளில் 25% காலி பணியிடங்களுக்கு TET
  தேர்ச்சிபெற்றவர்களை
  நியமித்து
  அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

  ReplyDelete
 2. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
  மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
  தவித்து வருகிறார்கள்.

  ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
  பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

  ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
  மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
  கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
  ஏற்பட்டுள்ளது.

  ஆசிரியர் பணிநியமனம் செய்ய
  போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று
  தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
  அவர்களை பணியமர்த்த வேண்டும்

  தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
  என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
  கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
  ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
  பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக
  முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று
  பணிவழங்க வேண்டும்
  ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைக்கும் வரை
  மாதம் 5000 என்ற அடிப்படையில் உதவிதொகை வழங்கவேண்டும்

  பள்ளியில் உபரி ஆசிரியகள் அதிகம் இருப்பின் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி
  பெற்றவர்களை நியமிக்கவேண்டும்

  TNPSC போன்ற தேர்வுகளில் 25% காலி பணியிடங்களுக்கு TET
  தேர்ச்சிபெற்றவர்களை
  நியமித்து
  அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

  ReplyDelete
 3. 100 times same msg. Is this message reach to cm ? Eppadium posting poda poradhilla, why are you wasting your time? Don't repeat this same msg ,

  ReplyDelete
 4. தொகுப்பு ஊதிய அடிப்படையிலானது பணி நியமனம் செய்யலாம். We are ready to work under consolidated pay.

  ReplyDelete
  Replies
  1. Part time teacher nanga oruthanga irrukom kirdhu maradhuradhinga..engAluku pinbu tha neega

   Delete
 5. உடற்கல்வி ஆசிரியர்களுக்கு merit la உள்ளவங்களுக்கே இன்னும் பணி நியமனம் வழங்காமல் இருக்குகிறார்கள்,,,,,விரைவில் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
  Replies
  1. முதல் மதிபெண் பெற்றவர்கள் மனநிலைமை யோசித்து பாருங்கள்,,, ,,உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனம் செய்யுங்கள்

   Delete
 6. Dmk vantha than posting intha muttal poda matranga

  ReplyDelete
 7. Good news spoken english class venum fluency venum good English teacher venum

  ReplyDelete
 8. நடுநிலை பள்ளிகளில் ஆங்கில பட்டதாரியாக பதவி உயர்வு வாங்க இடைநிலை ஆசிரியர்கள் செய்யும் திருட்டுத்தனம் உலகம் அறியும். ஆங்கில மொழி திறன் இல்லாத இவர்கள் பணம் பதவிக்காக இந்த கேவலமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக கொழுத்த பெண் ஆசிரியைகள் இதில் பழம் தின்று கொட்டை போட்டவர்களாக உள்ளனர். இது போன்ற திருட்டு கும்பலை களையெடுத்தால் ஆங்கில புலமை வாய்ந்த 15000 இளம் ஆசிரியர்கள் பணி பெறுவர்.. ஆசிரியப் பணியை பணம் கொழிக்கும் பணியாகவும் சமுதாயத்தை ஏமாற்றி பிழைக்கும் திருட்டுத் தொழிலாகவும் செய்து வரும் தமிழக கிராமப்புற ஆசிரிய கழிசடைகளை அகற்றினால்தான் தமிழகம் ஆங்கில வழி கல்வியில் சிறப்பிடம் பெறும்.. ஆனால், அது நடக்காது.. வெட்கம் கெட்ட வேதாள கூட்டம்..

  ReplyDelete
 9. அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியப் பெருமக்களின் ஆங்கில மொழித்திறனை SMC, PTA, BEO ,DEO, CEO மற்றும் கல்வியாளர்கள் கொண்ட குழுவினர் பள்ளிக்கே நேரடியாக சென்று பாடம் நடத்தச் சொல்லி சோதித்தால் மட்டுமே இந்த திருட்டு கூட்டங்களை களைய முடியும்..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி