ஆதிதிராவிட நலப்பள்ளியில் ஆசிரியர் நியமிக்கக்கோரி மனு - kalviseithi

Aug 26, 2020

ஆதிதிராவிட நலப்பள்ளியில் ஆசிரியர் நியமிக்கக்கோரி மனு

ஆதிதிராவிட நலப்பள்ளியில் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். 


செஞ்சி தாலுகா அகலுாரைச் சேர்ந்த காங்., விவசாய பிரிவு வடக்கு மாவட்ட தலைவர் ஜோலாதாஸ் தலைமையில் கொடுத்துள்ள மனு:எங்கள் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட நலப்பள்ளியில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கடந்த ஓராண்டாக தற்காலிக ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தினர்.தற்போது தற்காலிக ஆசிரியர்களையும் பணிக்கு அனுப்பவில்லை. மாணவர் சேர்க்கை நடக்கும் நிலையில், இப்பள்ளியில் மட்டும் சேர்க்கை நடைபெறவில்லை. மாணவர்களுக்கு சீருடையும் கொடுக்கவில்லை.எனவே, இப்பள்ளிக்கு ஆசிரியர்களை நியமித்து, தரத்தை உயர்த்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

6 comments:

 1. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனத்திற்கு காத்திருக்கும் பல ஆசிரியர்களை அரசுக்கு தெரியாது.ஏனென்றால் முதல்வரிலிருந்து ஆளுங்கட்சிக்கு அடுத்து ஆட்சியை எப்படி பிடிப்பது என்று செயல்திட்டத்திற்கே நேரம் சரியாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள்

   Delete
 2. Permanent Teachers appointment pannanum nu porattam panalam.

  ReplyDelete
 3. போராட்டமெல்லாம் வீண்தான் பொதுநல வழக்கு போடலாம்

  ReplyDelete
 4. நியமித்துவிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பார்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி