பிளஸ் 1 விடைத்தாள் நகல் இன்று பதிவிறக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2020

பிளஸ் 1 விடைத்தாள் நகல் இன்று பதிவிறக்கலாம்

பிளஸ் 1 விடைத்தாள் நகல்களை, இன்று பதிவிறக்கம் செய்யலாம்.இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்திருந்தால், அவர்கள் இன்று முதல், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.


இன்று பகல், 3:00 மணி முதல், www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில், தங்களின் பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து, விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.நகலை பதிவிறக்கம் செய்வோர், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு, 31ம் தேதி முதல், செப்., 2 வரை விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி