மேல்நிலை பள்ளி வகுப்புகள் எப்போது? கல்வி துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2020

மேல்நிலை பள்ளி வகுப்புகள் எப்போது? கல்வி துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

 பாலிடெக்னிக் கல்லுாரி, மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் எப்போது துவங்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.


கோவையைச் சேர்ந்த, பாலசுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனு: என் மகன் வருண்குமார், 'ஸ்நுாக்கர்' விளையாட்டில் ஆர்வமாக இருந்ததால், 10ம் வகுப்பு படிப்பை, பாதியில் நிறுத்தி விட்டார். தனியாக படித்து, தனித்தேர்வு எழுத, ஹால் டிக்கெட் பெற்றார். செய்முறை தேர்விலும் பங்கேற்றார். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, 'அனைவரும் பாஸ்' என, அறிவிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு தேர்வு எழுத, ஹால் டிக்கெட் பெற்ற தனி தேர்வர்களுக்கு, தேர்ச்சி பற்றி அறிவிக்கவில்லை.


இதற்கிடையில், நாளை மறுதினம் முதல், மேல்நிலைப்பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கை நடக்கும் என, அரசு அறிவித்துள்ளது. ஆனால், எந்த முடிவும் தெரியாமல், தனித்தேர்வர்கள் உள்ளனர். மாணவர்கள் மத்தியில், அரசு பாகுபாடு காட்டுவதாக உள்ளது. என் மகன் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்படி, அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். எந்த பதிலும் இல்லை. 


எனவே, தனி தேர்வர்களுக்கான முடிவு அறிவிக்கும் வரை, மேல்நிலைப்பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கையை தள்ளி வைக்கும்படி உத்தரவிட வேண்டும். தனி தேர்வர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவித்து, மதிப்பெண் பட்டியல் வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மேல்நிலை பள்ளி வகுப்புகள், பாலிடெக்னிக் கல்லுாரிகள் எப்போது துவங்கப்பட உள்ளது என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விசாரணையை, வரும், 25ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

4 comments:

  1. இந்த அரசு பள்ளிகளை திறந்தால் பணிநியமனம் போடணும் கொரோனவை
    வைத்தே இந்தகல்வியாண்டை வீணடிக்குது
    10&12
    சுயற்சி முறையிலாவது பள்ளிகளைதிறக்கலாம்

    ReplyDelete
  2. Village la corona problem athikam illa so village school open pannalam next city side open pannalam

    ReplyDelete
  3. inda varsam 10 all pass poeta nalla. Irukkum online class padikuradula Suttamaa intrestae illa

    ReplyDelete
  4. சீக்கிரம் திறங்கள்.. குடும்பக் கதை, புறணி பேசி குடுமிபிடி சண்டை போடாமல் தூக்கம் வராது தவிக்கிறார்கள். நாட்டாமைகள் மற்றும் பரட்டை தலைச்சிகள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி