பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு எப்போது? கல்வித்துறை விரைவில் வெளியிடுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2020

பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு எப்போது? கல்வித்துறை விரைவில் வெளியிடுகிறது.


தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்டு அனுப்பவேண்டும் என்று மத்திய கல்வித்துறை அனைத்து மாநில முதன்மைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. இதன் பேரில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பதாக தெரிகிறது. பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை தற்போதைய சூழ்நிலையில் பள்ளிக்கு அனுப்ப முடியாது என்று தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், தொடக்க பள்ளிகள் முதல் மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகிப்பது தொடர்கிறது. இந்நிலையில், பள்ளிகளில் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்றும், குடிநீர், கழிப்பிட வசதிகளை சரியாக செய்யவேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அதன் பேரில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. இந்த ஏற்பாடுகளை பார்க்கும் போதுவிரைவில் பள்ளிகளை திறப்பதற்கான அறிவிப்பு வரலாம் என்று கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

6 comments:

  1. 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்

    2013 ம் ஆண்டு ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று கடந்த ஏழாண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவரா? நீங்கள்


    வாட்ஸ்அப் குழுவில் இணைய
    *What's app*:
    https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

    ReplyDelete
  2. இந்த அரசு பணி வழங்க வாய்ப்பு இல்லை நண்பர்களே

    ReplyDelete
  3. 2013 tet பாஸ் செய்துவிட்டு இன்னும் வேலை கேட்கிறீர்களே அதன் பிறகு வேறு தேர்வு எழுதவில்லையா? நானும்2013 டெட் பாஸ் paper 1 98 paper 2 103. But நான் அதன் பிறகு குரூப் 2 குரூப் 4 பாஸ். படித்து வேறு வேலை தேடுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி