கால்நடை மருத்துவப் படிப்புகள்:இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2020

கால்நடை மருத்துவப் படிப்புகள்:இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் நடைமுறை திங்கள்கிழமை (ஆக. 24) முதல் தொடங்கியுள்ளது.


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு(பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்), உணவு, கோழியின மற்றும் பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகள் (பி.டெக்) பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.


பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில், இந்தப் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. 2020 - 21-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கும் நடைமுறை திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பா் 28-ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


வெளிநாடு வாழ் இந்திய மாணவா்களுக்கு அக்டோபா் 23-ஆம் மாலை 6 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்படுகிறது. இணையதள வழியே பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தகவல் தொகுப்பேடு, சோ்க்கைத் தகுதிகள், தோ்வு செய்யப்படும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி