12 ஆம் வகுப்புத் தமிழ் இணையவழித் திறனறித் தேர்வு! - kalviseithi

Aug 13, 2020

12 ஆம் வகுப்புத் தமிழ் இணையவழித் திறனறித் தேர்வு!

 

தமிழ் இணையவழித் திறனறித் தேர்வு -2


பெருமதிப்பிற்குரிய,

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும்  அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.


ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும், சோதிக்கவும் தமிழ் பாடம் சம்பந்தமாக நான் மேற்கொண்டு வரும் முயற்சியில் அடுத்தத்தேர்வு தொடர்கிறது. ஏற்கனவே, முதல் இரண்டு இயல்களுக்கான ஒரு மதிப்பெண் வினாக்கள் இணையவழி மூலம் தேர்வு நடத்தப்பட்டன. அது மிகுந்த பயனுள்ளதாக இருந்தது என்று ஆசிரியர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் ‍மற்றும் பெற்றோர்கள் தரப்பிலிருந்து வாழ்த்துகள் வந்த வண்ணமாக உள்ளது. மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த இயல்களுக்கான தேர்வுகளையும் நடத்தும்படி விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டதால், இதோ அடுத்த  இரண்டு இயல்களுக்கான ஒரு மதிப்பெண் வினாக்கள் இணையவழியில் நடத்தப்பட உள்ளன. முந்தைய தேர்வைப் போலவே இந்தத்தேர்வையும் நல்ல முறையில் பயன்படுத்தி உங்கள் தமிழ் அறிவையும் கற்றலையும் நீங்களே சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம். கூடுதலாக முதல் தேர்வை தவறவிட்டவர்கள் அல்லது கிடைக்காமல் போனவர்களுக்காக முதலிரண்டு இயல்களுக்கான இணையவழி உரலி/இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி முதல் தேர்வை எழுதாதவர்கள் எழுதிக்கொள்ளலாம். முதல் தேர்வு எழுதியவர்கள் இரண்டாவது தேர்விற்கு செல்லலாம். 


இந்த தேர்விலிருந்து தேர்வு எழுதக்கூடிய தேர்வர்களுக்கு ஒவ்வொரு நாளும் முதல் 100 பேருக்கு சான்றிதழ்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதனை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.


தேர்வு தொடங்கும் நாள் 07/08/2020.


தமிழ் இணையவழித் திறனறித் தேர்வு - 2


இங்கே சொடுக்கவும்தமிழ் இணையவழித் திறனறித் தேர்வு -1 ...

 இங்கே சொடுக்கவும்


வாழ்த்துகள்...

கு. மகேந்திரன்,

முதுகலை தமிழாசிரியர்,

அரசினர் மேல்நிலைப்பள்ளி, மேல்சோழங்குப்பம், திருவண்ணாமலை.

9787373206.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி