பி.இ. மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ஆவடி இயந்திர தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு! - kalviseithi

Aug 24, 2020

பி.இ. மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ஆவடி இயந்திர தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு!


பி.இ. அல்லது டிப்ளமோ படித்தவர்கள் சென்னை ஆவடியில் உள்ள இயந்திர தொழிற்சலையில் ஒரு வருட வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் ஆவடியில் மத்திய அரசு நிறுவனமான இயந்திர தொழிற்சலை இயங்கி வருகிறது. அங்கு தற்காலிகமாக ஒரு வருடத்திற்கு மட்டும் பணிபுரிய நேர்காணல் நடைபெற உள்ளது. 

இதற்கான அறிவிப்பை தொழிற்சாலை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிவிப்பில், தொழிநுட்ப பிரிவில் பி.இ பட்டதாரிகள், டிப்ளமோ பட்டம் பெற்றவர்கள், அதாவது 2018 அல்லது 2019 பட்டம் முடித்திருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வு பெறுவோரில் பி.இ. பட்டதாரியாக இருந்தால் மாதந்திர உதவி தொகையாக ரூ.9,000 மற்றும் டிப்ளமோ என்றால் ரூ.8,000 வழங்கப்படும். 

இந்த வேலை வாய்ப்புக்கான நேர்காணல் செப்டம்பர் 3ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக விருப்பம் உள்ளவர்கள் www.mhrdnats.gov.in என்ற இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ளவது அவசியம். நேரில் செல்லும் போது அனைத்து அசல் சான்றுகளையும் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், ஒரு வருட காலத்துக்கான தற்காலிக பணி என்பதால், அரசு வேலையாக கருதப்படாது என்று ஆவடி இயந்திரத் தொழிற்சாலை விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி