பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு முறை அரசின் முடிவில் தலையிட ஐகோர்ட் மறுப்பு - kalviseithi

Aug 26, 2020

பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு முறை அரசின் முடிவில் தலையிட ஐகோர்ட் மறுப்பு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் கணக்கீடு முறையை எதிர்த்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், ஊரடங்கு உத்தரவு காரணமாக, 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது.80 சதவீதம்காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், 80 சதவீதம்; வருகைப் பதிவு அடிப்படையில், 20 சதவீதம் என மதிப்பெண் கணக்கிடப்படுவதாக, அரசு அறிவித்தது.


மதிப்பெண் கணக்கீட்டு முறையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாணவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் கூறியிருப்பதாவது:திருப்புதல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், மாணவர்களின் தேர்வுக்கு தயார் நிலையை வெளிப்படுத்தும். எனவே, திருப்புதல் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை, இறுதி மதிப்பெண்ணாக எடுக்க வேண்டும். திருப்புதல் தேர்வுக்கு, 70 சதவீதம்; வருகைப் பதிவுக்கு, 30 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிட வேண்டும்.இவ்வாறு, மனுக்களில் கூறப்பட்டன.மனுக்களை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். பள்ளி கல்வித் துறை சார்பில், சிறப்பு பிளீடர் முனுசாமி, அரசு வழக்கறிஞர் அன்னலட்சுமி, புதுச்சேரி அரசு சார்பில், சிறப்பு பிளீடர் சையது முஸ்தபா ஆஜராகினர்.


தள்ளுபடி


நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:மாணவர்களின் நலன் கருதி, அரசு முடிவெடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. குறிப்பிட்ட முறையை பின்பற்றி மதிப்பெண் வழங்கலாம் என, அரசு முடிவெடுத்துள்ளது.அரசு பின்பற்றிய நடைமுறையில், மாணவர்கள் சிலருக்கு மகிழ்ச்சி இல்லாமல் இருக்கலாம். மதிப்பெண் கணக்கிட, வேறு நடைமுறை கூட இருக்க லாம். அதற்காக, அரசு எடுத்த முடிவில் குறுக்கிட முடியாது.


இதுபோன்ற விஷயங்களில், அரசின் முடிவுக்கு விடுவது தான் சரி.அரசு எடுத்த முடிவு தன்னிச்சையானது அல்ல என்பதில் நீதிமன்றம் திருப்தி அடைந்தால், அதன் கொள்கை முடிவில் தலையிடக் கூடாது. எனவே, அரசு உத்தரவில் தலையிட விரும்பவில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.


இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி