NEET தேர்வு மையம் எங்கே? மாணவர்கள் அறிய வசதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2020

NEET தேர்வு மையம் எங்கே? மாணவர்கள் அறிய வசதி

 

நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான, தேர்வு மையங்களை பார்க்கும் வசதியை, தேசிய தேர்வு முகமை அறிமுகம் செய்துள்ளது.


பிளஸ் 2 மற்றும் இளங்கலை அறிவியல் படிப்பு முடிப்பவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, தேசிய அளவில் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த ஆண்டுக்கான தேர்வு, மே மாதம் நடப்பதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, செப்., 13ல் நீட் தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வுக்கு தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், நீட் - ஜே.இ.இ., போன்ற தேர்வுகளை, ரத்து செய்ய முடியாது என்றும், திட்டமிட்டபடி தேர்வு நடக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதை தொடர்ந்து, நீட் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகியுள்ளன. 


இதன் ஒரு கட்டமாக, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களை, மாணவர்கள் அறிந்து கொள்ளும் வசதி, இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 'மாணவர்களின் பதிவு எண், தேர்வு மையம், தேர்வுக்கான மொழி, தேர்வு மையத்துக்குள் வரும் நேரம் போன்ற தகவல்களுடன், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படும்' என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

1 comment:

  1. நீட் தேர்வை இந்த ஆண்டு கட்டாயம் ரத்து செய்ய வேண்டும்.. மாற்று வழி முறைகளில் சேர்க்கை நடத்த வேண்டும். மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் அந்தந்த மாநிலமே முடிவு செய்து கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அல்லது மாநில நுழைவு தேர்வு இதில் சூழ்நிலை பொறுத்து முடிவு அந்த மாநிலமே செய்யட்டும்... தமிழக அரசு, எதிர் கட்சிகள் இந்த நேரத்தில் இதற்கு குரல் கொடுங்கள்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி