SI EXAM - முறைகேடு மறுதேர்வு கோரி வழக்கு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2020

SI EXAM - முறைகேடு மறுதேர்வு கோரி வழக்கு!

சப் - இன்ஸ்பெக்டர்கள் பணிக்கு, மறுதேர்வு நடத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


போலீஸ் துறையில், 969 சப் - இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு, 2020 ஜனவரியில் எழுத்துத் தேர்வு நடந்தது. இதில், 1.50 லட்சம் பேர் கலந்து கொண்டனர்; 5,275 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.எழுத்து தேர்வில் முறைகேடு நடந்ததாகவும், அதை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரியும், உயர் நீதிமன்றத்தில், சமூக சேவகர், 'டிராபிக்' ராமசாமி, மனு தாக்கல் செய்தார்.மனுவில், 'தேர்வில், ஒருவரை ஒருவர் பார்த்து எழுத ஏற்பாடு செய்யப்பட்டது; அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை; மொபைல் போன் அனுமதிக்கப்பட்டது' என, கூறப்பட்டது.


மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும் படி, சீருடை பணியாளர் தேர்வு வாரியம், டி.ஜி.பி., தமிழக அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணையை, செப்., 30க்கு தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி