பொறியியல் மேற்படிப்புக்கான கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.7 வரை கால அவகாசம் நீட்டிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2020

பொறியியல் மேற்படிப்புக்கான கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.7 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

 


பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாணவர்கள் அக்டோபர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி. உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கு "கேட்" (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒருசில தனியார் கல்வி நிறுவனங்களில் உதவித்தொகை இல்லாமல் இப்படிப்புகளில் படிக்கவும் கேட் தேர்ச்சியை எதிர்பார்க்கின்றன.


கேட் நுழைவுத்தேர்வை பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் அல்லது சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி  நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று ஆண்டுதோறும் நடத்தும்.

மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 25 பாடப் பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத்தேர்வு பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் 2021-22 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மாணவர்கள் அக்டோபர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கேட் தேர்வை நடத்தும் ஐஐடி பாம்பே  அறிவித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: https://gate.iitb.ac.in/

2 comments:

  1. https://www.youtube.com/watch?v=hICQrxUpTrU

    ReplyDelete
  2. இந்த ஆட்சி அமைந்தாலே பணி நியமன தடைச்சட்டம் கொண்டு வந்து பணியிடங்களை நிரப்புவதற்கே தடைச்சட்டம் கொண்டுவந்து விடுவார்கள். ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்த போது இந்த நிலை ஏற்பட்டு பல இளைஞர்களின் அரசுப்பணி கனவைத் தகர்த்தார்கள். தற்போது ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக பணி நியமனத்தடைச்சட்டம் கொண்டு வர வில்லை. ஆனால் கொத்தடிமை நிலைக்கு 5000 சம்பளம், 7000 சம்பளம் என்று பல்லாயிரக்கணக்கானோரை கொத்தடிமைகளாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறை என பல துறைகளிலும் இதே நிலை தான். இதை யாராலும் மறுக்க முடியாது. அரசுப் பணி என்ற கனவு நிறைவேறுவதே ஏழைகளுக்கு வாழ்வளிக்கும். அந்த கனவை தகர்த்தால்?????? ஆனால் நாம் பார்க்கும் வேலைவாய்ப்பு நம் அருகில் இருப்பவர்களுக்கு எப்படி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சாதாரண தொகுப்பூதிய வேலைகளுக்கு பல லகரங்களை தட்சணையாக பேசிவருகிறார்கள். வழங்கி வருகிறார்கள். இது உங்கள் அருகில் இருப்பவர்களை விசாரித்தால் தெரியும். அதே போல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சொற்ப பணியிடங்களை அறிவிப்பதும் அதில் பல ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்வதும் பின் அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருடக்கணக்கில் இழுத்தடிப்பதும் நடந்து வருகின்றன. ஏன் இப்படி இந்த அரசு ஏழைகளுக்கு கிடைக்கும் அரசுப்பணியை தடுக்கிறது???????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி