"ஆன்லைன் வகுப்புகளுக்கு கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது!" - பள்ளிகல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2020

"ஆன்லைன் வகுப்புகளுக்கு கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது!" - பள்ளிகல்வித்துறை



கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணர்வர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 


ஆன்லைன் வகுப்புகளுக்கு என தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் செலுத்த கூறி சில தனியார் பள்ளிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்து.


இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், ஆன்லைன் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தக் கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 


மேலும் செப்டம்பர் 21 முதல் 25 ஆகிய 5 நாட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் எக்காரணத்தை கொண்டும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. 


இது தொடர்பாக ஏதேனும் புகார் கிடைக்கபெற்றால் கடும் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. தனியார் ஆசிரியர்களுக்கு ஊதியம் எவ்வாறு கிடைக்கும் பள்ளி கட்டணம் வசூலிக்காமல் இருந்தால். பல்லாயிரம் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் என்னவாகும்?

    ReplyDelete
  2. maximum private school teacher got 30-50percent salary

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி