வனக்காப்பாளர் தேர்வு விண்ணப்பதாரர்கள் கவலை - kalviseithi

Sep 8, 2020

வனக்காப்பாளர் தேர்வு விண்ணப்பதாரர்கள் கவலை

ஊரடங்கால் நிறுத்தப்பட்ட வனக்காப்பாளர் தேர்வு நடவடிக்கைகள், மீண்டும் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பில்,விண்ணப்பதாரர்கள் உள்ளனர். 


தமிழகத்தில், 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு, மார்ச், 8ல் நடந்தது. இந்த தேர்வில், 66 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.தேர்வுக்கு பிந்தைய சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் திறன் தேர்வு மே மாதம் நடக்கும் என, அறிவிக்கப்பட்டது. ஊரடங்கால், இந்நடவடிக்கைகள் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.இது குறித்து, வனக்காப்பாளர் தேர்வு விண்ணப்பதாரர்கள் கூறியதாவது:தமிழகத்தில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன; பொது போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. 


அரசு அலுவலகங்கள் வாரத்தில் ஆறு நாட்கள், 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படுகின்றன. இந்நிலையில், வனக்காப்பாளர் பணி தேர்வு நடவடிக்கைகளை வனத்துறை துவங்க வேண்டும். இதுகுறித்து, முதல்வர், வனத்துறை அமைச்சர் ஆகியோரிடம் முறையீடு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வனக்காப்பாளர் தேர்வுக்கு பிந்தைய நடவடிக்கைகளை, மீண்டும் துவங்குவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஓரிரு வாரங்களில் புதிய அறிவிப்பு வரும்' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி