இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு பற்றி நேற்று தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2020

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு பற்றி நேற்று தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

2009 க்குப்பின் பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் பற்றி சட்டசபையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் 5 எம்.எல்.ஏக்கள் மூலம் முன்மொழியப்பட்டது.


"சம வேலைக்கு" "சம ஊதியம்"


"ஒரே பதவி" "ஒரே பணி" "ஒரே கல்வித்தகுதி" ஆனால் அடிப்படை ஊதியத்தில் 50% குறைவு. இந்த ஊதிய முரண்பாட்டை களைய கோரி மூன்று முறை மிககடுமையான உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்று அரசு எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளித்து அதனை நிறைவேற்ற 10 ஆண்டுகளாக தொடர்ந்து மறுத்து வருகிறது இதற்காக அமைக்கப்பட்ட திரு.சித்திக் IAS அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஊதிய குழுவும் ஜனவரி-2019 ல் முதலமைச்சரிடம் அறிக்கை அளித்தும் இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவில் இந்த பிரச்சனைக்கு முடிவு காண வேண்டும் என நேற்று காங்கிரஸ் தலைமையிலான ஐந்து எம்.எல்.ஏக்கள் தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி