அரியர்' தேர்வை நடத்த உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்! - kalviseithi

Sep 4, 2020

அரியர்' தேர்வை நடத்த உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!


கல்லுாரி மாணவர்களுக்கு, 'அரியர்' தேர்வை நடத்த உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.திருச்செந்துாரைச் சேர்ந்த, வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:


கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகளில், இறுதி செமஸ்டர் தவிர்த்து, மற்ற செமஸ்டர்களுக்கான கட்டணம் செலுத்தி, தேர்வுக்காக காத்திருப்பவர்களுக்கும், தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை, 2020 ஆக., 26ல் பிறப்பிக்கப்பட்டது.


பல்கலை கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில், உயர் கல்வித் துறை தலையிட உரிமையில்லை. விண்ணப்பித்த மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்ய, உயர் கல்வித் துறைக்கு அதிகாரமில்லை; வேண்டுமானால், தேர்வை தள்ளி வைக்கலாம்.


தேர்வு நடத்துவது, முடிவுகளை வெளியிடுவது குறித்து, பல்கலை சிண்டிகேட், சென்ட், அகாடமிக் கவுன்சில் தான் முடிவெடுக்க வேண்டும். துணைத் தேர்வு எழுத, உயர் கல்வித் துறை அனுமதித்து உள்ளது. ஆனால், கல்லுாரி மாணவர்களுக்கு, அரியர் தேர்வுகளை ரத்து செய்து உள்ளது.மாணவர்கள் பலர், 10க்கும் மேல் அரியர் வைத்துள்ளனர். தேர்வு எழுதாமல் இவர்கள்தேர்ச்சி பெற்றால், கல்வி தரம் குறைந்து விடும். 


அரியர் வைத்திருப்பவர்களையும் தேர்ச்சி பெற்றதாக, இவ்வளவு அவசரப்பட்டு அறிவிக்க வேண்டியதில்லை.எனவே, உயர் கல்வித் துறை உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். கல்லுாரி மாணவர்களுக்கு, அரியர் தேர்வை நடத்தும்படி, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. இது சரியான முடிவுதான், ஒரு அரியர் கூட இல்லாமல் கஷ்டபட்டு படித்தவனும் பட்டதாரி.அரியர் ேர்வை எழுதாமல் pass பண்ணுனவனும் பட்டதாரி. இவர்கள் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்தாலும் கல்வியின் தரம் எப்படி இருக்கும்????

    ReplyDelete
  2. அப்புறம் எதற்கு Final year Exam and TET all pass செய்யலாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி