விழாக்கள் இன்றி இன்று ஆசிரியர் தினம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2020

விழாக்கள் இன்றி இன்று ஆசிரியர் தினம்

ஆசிரியர்கள் தினம், இன்று கொண்டாடப்படுகிறது.


முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இன்று எளிய முறையில் கொண்டாடப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.



தமிழக அரசின் சார்பில், 375 ஆசிரியர்கள், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வரும், 7ம் தேதி மாவட்ட வாரியாக விழா நடத்தி, விருது வழங்கப்படுகிறது. மாநில அளவிலான விருது விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னையால், அரசு பள்ளிகளில் விழா ஏற்பாடு செய்யப்படவில்லை. தனியார் பள்ளிகள் தரப்பில், 'ஆன்லைனில்' ஆசிரியர் தின நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி